கமலுக்கு எதிராக கவின், சினேகன் போட்ட ட்வீட்.. பிரதீப் ஆண்டனிக்கு செம ஸ்ட்ராங்கான ஆதரவு!
சென்னை: பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு ஆதரவு இல்லை என கமல்ஹாசன் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளார். அதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கவின் மற்றும் சினேகனும் தங்களது கருத்தை போல்டாக பதிவிட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் நிக்சன் உடன் ரொமான்ஸ் செய்யும் ஐஷு, மணிசந்திராவுடன் இடுப்பில் ஏறி அமரும் ரவீனா தாஹா பொதுமேடையில் பெண் தொகுப்பாளினியை ஹராஸ் செய்த கூல் சுரேஷை பிக் பாஸ் வீட்டில் இடம் கொடுத்து விட்டு அவர்கள் எல்லாம் கொடுத்த புகாரின் பேரில் கமல் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது முற்றிலும் தவறு என பல பிக் பாஸ் விமர்சகர்களே விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், கவின் மற்றும் சினேகன் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு அளித்து பதிவிட்டுள்ள கமெண்ட்டுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரதீப் ஆண்டனி மானமே போச்சு: பாத்ரூமில் டோர் மூடாமல் அசிங்கம் பண்ணுகிறார் பிரதீப் ஆண்டனி என்றும் என்னுடைய அண்ணாக்கயிறு பற்றி எல்லாம் பேசுகிறார் பிரதீப் என ரவீனா தாஹாவும் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய நிலையில், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் பிரதீப் பார்வை சரியில்லை என்றும் அதற்கு மேல் ஆபாசமாக எதையோ செய்தது தான் அவர் இப்படி வெளியேற்றப்படவே காரணம் என்றும் கூறுகின்றனர்.
சினேகன் ட்வீட்: பிக் பாஸ் போட்டியாளரும் மநீம அங்கத்தினருமான சினேகனே கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய நிலையில், அவரது உத்தரவுக்கு எதிராக, தனது கருத்தை பிரதீப்புக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளார்.
"நீ பார்க்காத
ரணங்களும் இல்லை...
நீ பார்க்காத
வலிகளும் இல்லை...
பிரதீப்...
இதுவும் கடந்துபோகும்.
வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை....
வெளியே கிடக்கு வா...
@TheDhaadiBoy" என ட்வீட் போட்டுள்ளார்.
கவின் ஆதரவு: உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நீ யாரென்று தெரியும் நண்பா என சபரி மலைக்கு செல்லும் போது பிரதீப் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு கவினும் தனது நண்பனுக்கு முழு ஆதரவை அளித்துள்ளார். ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் பிரதீப் ஆண்டனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











