கடைசியாக கலையரசியை சந்திக்கும் வேட்டையன்.. விஜே சித்து உடலுக்கு கண்ணீர் மல்க கவின் அஞ்சலி!

சென்னை: நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான கவின் விஜே சித்துவின் பூத உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

VJ Chithra வுக்கு அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோஸ் குடும்பம் | Miss You Mullai

தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்த விஜே சித்து எனும் சித்ரா, நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட சித்ராவின் உடலுக்கு பொதுமக்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தற்கொலை தான்

தற்கொலை தான்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் என பலரும் விஜே சித்ராவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கொலையாக இருக்குமா? என்கிற சந்தேகம் கிளம்பிய நிலையில், தற்கொலை தான் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநியாயமா கொன்னுட்டாங்க

அநியாயமா கொன்னுட்டாங்க

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து பிரபலமான சித்ராவின் மரணம் ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி உள்ளன. எந்தவொரு தற்கொலைக் கடிதமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், சித்ராவுடன் தங்கியிருந்த அவரது வருங்கால கணவர் ஹேமந்த் ரவி தான் தன் மகளை கொன்றுவிட்டான் என சித்ராவின் தாயார் கதறி அழுத வீடியோ பலரது நெஞ்சை உலுக்கியது.

கவின் அஞ்சலி

சின்னத்திரை பிரபலங்கள் சித்ராவின் பூத உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்த நடிகர் கவினும் சித்ராவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கலையரசியும் வேட்டையனும்

கலையரசியும் வேட்டையனும்

கலையரசி என்கிற கதாபாத்திரத்தில் சரவணன் மீனாட்சி தொடரிலும் சித்ரா நடித்திருந்தார். கடைசியாக கலையரசியை சந்திக்கும் வேட்டையன் என கேப்ஷன் போட்டு கவின் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மாஸ்க் அணிந்து கொண்டு மிகவும் வேதனையுடன் கவின், சித்ராவுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X