யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
சென்னை: இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கவின் முடித்து விட்டதாக சூப்பரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்த போதே கவினுக்கு ஏகப்பட்ட பெண்கள் ரசிகைகளாக மாறினர். டாடா படத்திற்கு பிறகு கவினுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

யதார்த்தமாக எப்படி நடிப்பது என்பதை இளம் நடிகர்களுக்கு கற்றுத் தரும் வகையில் கலக்கலாக நடித்து வருகிறார் கவின். ஸ்டார் படம் அவருக்கு மிகப்பெரிய படமாக வாழ்க்கையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கி விட்ட பிக் பாஸ்: விஜய் டிவி சீரியல் நடிகர்களை செலிபிரிட்டிகளாக மாற்றுவதே பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பல கோடி மக்களுக்கு அவர்கள் பரீட்சையமாகி விடுகின்றனர். அதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் திறமையானவர்களுக்கு படங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள் தான் ஓவியா, லாஸ்லியா, ஷிவானி மாதிரி காணாமல் போய் விடுகின்றனர் என்றும் சரியாக பயன்படுத்தினால் ஹரிஷ் கல்யாண், கவின் போல ஷைன் ஆகலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

போன வருஷம் டாடா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்து வெளியான லிப்ட் பேய் படம் ஓடிடியில் வெளியானாலும் நல்ல வரவேற்பை கவினுக்கு கொடுத்தது. அந்த படம் தந்த வெற்றிதான் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான டாடா படம் கவினுக்கு 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்தது. ரைசிங் ஸ்டாராக வளர்ந்து வரும் கவின் அடுத்ததாக ஸ்டார் எனும் படத்திலேயே நடித்துள்ளார். இந்த படத்தை இளன் இயக்கி உள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஷீ வெப்சீரிஸில் நடித்த அதிதி போஹங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
டப்பிங் ஓவர்: யங் லுக்கில் கவின் சைக்கிளில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு படத்தின் டப்பிங் நிறைவடைந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார் கவின். சீக்கிரமே கவினின் ஸ்டார் திரைப்படம் தேர்தல் முடிந்ததும் மே மாத ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டார் படம் அவருக்கு பெரியளவில் கைகொடுத்தால் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகவே மாறிவிடுவார்.


Click it and Unblock the Notifications











