"இன்னா மயிலு".. இணையத்தை தெறிக்க விட்ட பாடல்.. கலக்கிய கவினின் நடன வீடியோ!
சென்னை : லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு பாடலுக்கு கவின் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். ஹேப்சி தயாரித்துள்ளார்.
கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

பிக்பாஸில் பிரபலமானார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தவர் கவின். இவர், நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அம்ரிதா ஐயர் ஹீரோயின்
நடிகர் கவின் தற்போது, இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இன்னா மயிலு வைரல்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு என்ற பாடல் இணையத்தில் வைரலாகி அனைவரும் விரும்பும் பாடலாக உள்ளது.

செம டான்ஸ்
இந்நிலையில், நடிகர் கவின் லிப்ட் திரைப்படத்தில் வரும் இன்னா மயிலு, பாடலுக்கு பாவகக்கதைகள் படத்தின் மூலம் பிரபலமான ஜாபருடன் இணைந்து நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











