குறைஞ்சிடுவீங்களா? ஒரு மனுஷன இவ்ளோ கஷ்டப்படுத்தக்கூடாது அண்ணி.. லாஸ்லியாவால் கடுப்பான கவின் ஃபேன்ஸ்!
சென்னை: லாஸ்லியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நொந்து போய் கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார்.
ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவர் பின்னர் கவினுடன் கடலை போட தொடங்கினார். கவினிடம் வழிவது, வாண்ட்டடாக அவரிம் போய் வலிய பேசுவது, மற்றவர்களிடம் ஆட்டிட்யூட் காட்டுவது என போக்கை மாற்றினார்.

கோபம்
கவின் சாக்ஷியை காதலிக்கிறார் என்று தெரிந்தும் அவரை தீவிரமாக காதலித்தார். இதனால் மொத்த பெயரையும் டேமெஜ் செய்து கொண்டார் லாஸ்லியா. ஆரம்பத்தில் இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்றழைத்து பார்வையாளர்களின் வீட்டிலும் மகளாக பார்க்கப்பட்டார். கவினை காதலித்ததால் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.

கவின் லியா ஆர்மி
ஆனாலும் கவினின் ரசிகர்கள், அண்ணி அண்ணி என லாஸ்லியாவை கொண்டாடினர். இருவருக்கும் தனித்தனியாக ஆர்மியை ஆரம்பித்த ரசிகர்கள், அவர்களின் தீவிர காதலை பார்த்து கவின் லியா ஆர்மி என்று இருவரது பெயரையும் சேர்த்து வைத்து அதகளப்படுத்தினர். திருமணம் செய்து வைக்காத குறையாக இருவரையும் சேர்த்து வைத்து ரகளை செய்தனர்.

வாய் திறக்கல
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கவின், தான் சிங்கிள் என்று கூறி காதல் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் ரசிகர்கள் அவர்களை கணவன் மனைவியாகவே பார்த்து வருகின்றனர்.

க்யூட் பியூட்டி
இந்நிலையில் அடுத்தடுத்து இருபடங்களில் கமிட்டாகி உள்ள லாஸ்லியா தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மெரூன் நிறை உடையில் அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் க்யூட், பியூட்டி என புகழ்ந்து வருகின்றனர்.
இப்படியா கஷ்டப்படுத்துறது?
சிலர் ஒரு ஹாய் சொல்லுங்கள்.. ஒரு ரிப்ளை கொடுங்கள் என கெஞ்சி வருகின்றனர். ஆனால் அதனை லாஸ்லியா கொஞ்சம் கண்டு கொள்ளாததால் கடுப்பான ரசிகர்கள் ஒரு மனுஷன இப்படியா கஷ்டப்படுத்துறது? எத்தனை முறை கேட்பது ஒரு ஹாய் சொன்னால் என்ன? அண்ணி அவர்களே என கடுப்பாகி கமென்ட் செய்து வருகின்றனர். கவினை அண்ணன் என குறிப்பிடும் ரசிகர்கள் லாஸ்லியாவை அண்ணி என அழைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











