முட்டை டாஸ்க்கா முக்கியம்.. அது கவின் வாய்ஸா? இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்.. டிரெண்டான #Kavin
சென்னை: அன்சீன் புரமோவில் காட்டிய முட்டை டாஸ்க்கை எதிர்பார்த்தபடியே நிகழ்ச்சியில் வைத்து விட்டனர்.
ஆனால், அந்த முட்டை டாஸ்க்கை ரசித்ததை விட, அதில் வந்த குரல் கவினுடையதா? இல்லையா? என்கிற விவாதம் தான் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
#Kavin என்ற ஹாஷ்டேக்கை எல்லாம் போட்டு கவின் ஆர்மியினர் திடீரென டிரெண்ட் செய்தது வேற லெவல்.
மறக்க முடியாத பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன்களிலேயே கடந்த 3வது பிக் பாஸ் சீசனை இன்னமும் ரசிகர்கள் மறக்க முடியாமல் நினைவில் வைத்துள்ளனர். அதிலும், நடிகர் கவினின் ஆர்மியினர் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருப்பது உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே காட்டுகிறது. இந்த சீசனில் இதுவரை யாரும் அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முட்டையை தலையிலேயே ஒடைக்கணும்
பிக் பாஸ் அன்சீன் புரமோவில் காட்டப்பட்ட முட்டையை தலையிலேயே அடித்து ஒடைக்கிற டாஸ்க்கை நிகழ்ச்சியில் வைத்திருந்தனர். கால் டாஸ்க்கில் பிரிந்துள்ள அணிகளே இந்த போட்டியிலும் இரு அணிகளாக பிரிந்து விளையாடினர். நடுவராக இந்த வார கேப்டன் ஜித்தன் ரமேஷ் இருந்தார்.

பாலா டீம் வின்
அர்ச்சனா டீம் ஏ டீமாகவும், பாலாவின் டீம் பி டீமாகவும் இருந்து விளையாடியது. இந்த போட்டியில் முதல் சுற்றில் பாலா, ஷிவானி, ஆஜீத், கேபி, சனம், அனிதா இருந்த டீம் வின் பண்ணது. இரண்டாவது சுற்றில் அர்ச்சனா, ரியோ, நிஷா, ரம்யா, ஆரி, சோம் டீம் டிரா செய்தது. மூன்றாவது சுற்றில் மீண்டும் பி டீம் வெற்றிப் பெற்று போட்டியில் ஜெயித்தது.

முட்டை டாஸ்க்கா முக்கியம்
செம ஃபன்னாக முட்டை டாஸ்க் சென்றாலும், அதிலும் ஷிவானிக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே சண்டை உருவானது. பாலாவை போலவே பிரச்சனையை உருவாக்கும் சனம் ஷெட்டி பெருசா பிரச்சனையை உருவாக்க நினைத்தாலும், யாரும் அதை கண்டுக்கவில்லை. முட்டை டாஸ்க்கா முக்கியம், அதில் வந்த அந்த குரல் தான் முக்கியம் என ரசிகர்கள் திரண்டது ஆச்சர்யத்தின் உச்சம்.
Recommended Video

கவின் வாய்ஸ்
திண்டுக்கல் தண்டபாணி என்கிற பெயரில் முட்டை டாஸ்க்கை வழிநடத்திய குரல் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினின் குரல் என ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். ஆனால், இல்லை அது விஜய் டிவியின் வேலை என்றும் அது கவின் குரல் இல்லை மிமிக்ரி செய்திருப்பார்கள் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
வாய்ஸுக்கே டிரெண்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சியையும், அதில் பங்கேற்ற போட்டியாளரையும் ரசிகர்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதற்கு கவின் ஒரு நல்ல உதாரணம். கவின் வாய்ஸா? இல்லையா என்று தெரியாத நிலையிலேயே #Kavin என்ற ஹாஷ்டேக்கை கவின் ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்தனர்.


Click it and Unblock the Notifications











