கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்!

Recommended Video

SANDY DANCE WITH WIFE | CUTE DD | DAZZLE STYLE ICON AWARD | FILMIBEAT TAMIL

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுக்கு அடித்துள்ள ஜாக்பாட் குறித்து அவரே வாய்திறக்காத நிலையில் சாண்டி அந்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இவர் அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்களுடன் கடலைப் போடுவது, அவர்களை காதலிப்பது, மற்ற போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர் வைத்து அவர்களை கேவலமாக பேசுவது என இருந்து வந்தார். குறிப்பாக கன்டென்ட்டுக்காக இவர் செய்த காதல் பெரும் சர்ச்சையானது.

சாடி நெட்டிசன்ஸ்

சாடி நெட்டிசன்ஸ்

இதனால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் ரசிகர்கள். ஆனாலும் இவர் பணம் கொடுத்து ஓட்டு போட செட் செய்ததாகவும், தங்களின் சேனலை சேர்ந்தவர் என்பதால் விஜய் டிவி கவினை காப்பாற்றுவதாகவும் நெட்டிசன்கள் சாடினர்.

பேச விரும்பவில்லை

பேச விரும்பவில்லை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்த கவின், பிக்பாஸ் கொண்டாட்டத்தில் தனக்கு சில பொறுப்பு இருப்பதால் அதைப்பற்றி தற்போது பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.

பங்கேற்காத கவின்

பங்கேற்காத கவின்

இதனால் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையிலான காதல் முறிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில் கவின் பங்கேற்கவில்லையாம்.

போட்டுடைத்த சாண்டி

போட்டுடைத்த சாண்டி

இதுகுறித்து ரசிகர்கள் சாண்டியிடம் கேட்டதற்கு அவர் பட ஷுட்டிங்குக்காக வெளிநாடு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை இதுவரை கவினே வெளியே சொல்லாத நிலையில் சாண்டி மேடையில் டப்பென போட்டு உடைத்துவிட்டார்.

வெளிநாடு பயணம்

வெளிநாடு பயணம்

பிக்பாஸ் முடிந்த கையோடு கவின் புதிய படங்களில் ஒப்பந்தமானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கவின், படப்பிடிப்புக்காக ஃபாரின் சென்றுள்ளார். இதனை கேட்ட கவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X