ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் கவின்!

Recommended Video

Bigg boss Kavin in Sivakarthikeyan movie | சிவகார்த்திகேயனுடன் இணையும் கவின்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே18' மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க கவின் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் மற்றும் லாஸ்லியா இடையே மலர்ந்த காதல் திருமணமாக மாறுமா என பிக்பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து செம்ம படங்கள் வரிசை கட்டி நிற்கின்ற செய்தி கவின் ரசிகர்களுக்கு மேலும், உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஆரம்பம்

ஆரம்பம்

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் 2012ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் கவின். அதற்கடுத்து சரவணன் மீனாட்சி தொடரில், வேட்டையனாக ரசிகைகளிடையே பிரபலமான கவின், அதே விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.

ஹீரோ

ஹீரோ

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு வரும் முன்னதாகவே கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். கவினுக்கு ஜோடியாக அந்த படத்தில் ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். முதல் படத்திலேயே நல்ல வெற்றியை ருசி பார்த்த கவின், தற்போது பிக்பாஸ் புகழோடு, வெள்ளித்திரையில் இன்னும் பெரிய இடத்தை நோக்கி அடியெடுத்து வைக்கவுள்ளார்.

எஸ்.கே18

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ளார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் 'கனா' தர்ஷன் மற்றும் பிக்பாஸ் கவின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், சிவகார்த்திகேயன், நெல்சன், கவின் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு மாங்கா

இரண்டு மாங்கா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்.கே18 படத்திலும், அதற்கடுத்து, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாகவும் கவின் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தான் கவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

கல்யாணம் எப்போ?

கல்யாணம் எப்போ?

ஆரவ் - ஓவியா மாதிரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக காதலித்து மருத்துவ முத்தம் கொடுத்து விட்டு, வெளியே வந்ததும் அது வெறும் நடிப்பு என்று இருவரும் பிரிந்தது போல, கவின் - லாஸ்லியா ஜோடி அவ்வளவு எளிதாக தங்களது காதலை நினைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தாண்டியும் இருவரும் காதலித்து வருவதாகவும், இரு வீட்டு சம்மதத்துக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. விரைவில் கவின் - லாஸ்லியா குறித்த நல்ல செய்தியும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவி விஸ்வாசம்

விஜய் டிவி விஸ்வாசம்

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவான சிவகார்த்திகேயன், ரியோவை அடுத்து கவினுக்கும் படம் தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், எல்லாம் விஜய் டிவி விஸ்வாசம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X