லோக்கி அல்ல அயன்மேன்.. கொதித்தெழுந்த கவின் ஆர்மி.. கதறும் ரியோ!
பிக்பாஸ் மூன்றாம் சீசனின் பாய்ஸ் குரூப் போட்டியாளர்களை சூப்பர் ஹீரோக்கள் பொம்மையாக வடிவமைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் மூன்றாம் சீசனின் பாய்ஸ் குரூப் போட்டியாளர்களை சூப்பர் ஹீரோக்கள் பொம்மையாக வடிவமைத்துள்ளனர். அந்த புகைப்படத்தை நடிகரும், தொகுப்பாளருமான ரியோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மூன்றாவது ஆண்டாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு முகேன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இறுதி போட்டியாளராக இருந்த முகேன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகிய நால்வரும் பாய்ஸ் குரூப்பாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
அவெஞ்சர்ஸ் மற்றும் டெட்பூல் படத்தில் வரும் சூப்பர் ஹீரோக்களின் உருவங்களில் தற்போது பிக்பாஸ் பாய்ஸ் குரூப் போட்டியாளர்களின் உருவம் பதித்த பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

யாருக்கு எந்த சூப்பர் ஹீரோ
பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்ற முகேனை, அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் இடி கடவுளான தோர் கதாபாத்திரமாக வடிவமைத்த பொம்மையுடன், சக்திவாய்ந்த மற்றும் வெற்றியாளர் என்ற கேப்ஷனை ரியோ கொடுத்துள்ளார்.
தர்ஷனை கேப்டன் அமெரிக்காவாக மாற்றி தன்னைத் தானே தலைவனாக செதுக்கியவன் என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார்.
கவினுக்கு தோரின் அண்ணன் லோகியில் கதாபாத்திரத்தை கொடுத்து கேம் சேஞ்சர் என்ற பட்டத்தை கொடுத்துள்ளார்.
சாண்டி மாஸ்டரை டெட்பூலாக மாற்றி எண்டர்டெயினர் என்ற கேப்ஷனையும் ரியோ கொடுத்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய கவின் ஆர்மி
நடிகர் ரியோ வெளியிட்டுள்ள இந்த சூப்பர் ஹீரோ வரிசையை பார்த்து கவின் ஆர்மி பயங்கர கடுப்பாகி உள்ளனர். கவினுக்கு எப்படி தோரின் அண்ணனான லோகி கதாபாத்திரத்தை கொடுப்பீர்கள் என்று விளாசி வருகின்றனர்.

கவின் எப்படி
கவினுக்கு அயன்மேன் தான் சரியான தேர்வு என்றும், சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த லோகியின் கதாபாத்திரத்தை தேர்வு செயததற்கு மன்னிப்பு கேளுங்கள் என்றும் கவின் ஆர்மியினர் ரியோவை கமெண்டால் கழுவி ஊற்றியும் டிரோல் செய்தும் வருகின்றனர்.

ரியோ மன்னிப்பு
கவின் ஆர்மியினர் செய்த அலப்பறையினால் அப்செட்டான ரியோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக, நாமெல்லாம் மீடியா பொம்மைகள், ஒரு ஷோவை நடத்திவிட்டு சம்பளம் வாங்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு என பதிவிட்டுள்ளார்.

மீண்டும் முதலிலிருந்து
சூப்பர் ஹீரோவாக பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பிட்டு ட்வீட் போட்டது ஒரு குத்தமாடா என்ற தொனியில் மன்னிப்புக் கோரியுள்ள ரியோவை விடாது, மீண்டும் மீண்டும் கவினின் ஆர்மியினர் நீங்க வேலை செய்கின்ற தொலைக்காட்சிக்கு ஆதரவா ஜால்ரா அடிக்காதீங்க என்றும் மீடியா டாய் என்ற வார்த்தைக்கு பதிலாக சேனல் டிசைருன்னு சொல்லிட்டுப் போங்க என மீண்டும் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











