Kavin: கல்யாணம் முடிஞ்ச வேகத்தில் கவினுக்கு அடித்த ஜாக்பாட்... வெளியானது ஸ்டார் படத்தின் ப்ரோமோ!

சென்னை: விஜய் டிவி பிரபலம் கவினுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் நல்ல அடையாளம் கொடுத்தது.

அதன்பின்னர் அவர் நடித்த ஸ்டார், டாடா திரைப்படங்கள் கவின் கேரியரில் சூப்பரான கம்பேக் கொடுத்தது.

இதனையடுத்து அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகியுள்ள கவின், சமீபத்தில் தான் தனது காதலியை கரம் பிடித்தார்.

இந்நிலையில், கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 Kavin: Kavin’s Star Movie Yuvan Birthday Special promo is out

ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ: விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் முகம் காட்டியவர் கவின், அதேநேரம் சில படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். இதனிடையே ஹீரோ கனவில் இருந்த கவினுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதன் காரணமாக கவின் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கவின் நடித்த டாடா திரைப்படமும் தியேட்டரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது காதலி மோனிகாவை கரம் பிடித்தார் கவின்.

கடந்த 20ம் தேதி நடைபெற்ற கவின் - மோனிகா திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது லாஸ்லியாவும் கவினும் காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், மோனிகா தான் தனது காதலி என அறிமுகம் செய்த கவின், ஊரறிய திருமணமும் செய்துவிட்டார். இந்நிலையில் கவினின் இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் சைலண்டாக நடந்து வருகிறது.

கவினின் ஐந்தாவது படமாக உருவாகும் இதனை இலன் இயக்கி வருவதும் தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமான இலன், அடுத்து ஸ்டார் என்ற டைட்டிலில் ஒரு படத்தை இயக்கவிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அதன்பின்னர் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது கவின் தான் ஸ்டார் படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பாரதியின் கவிதை வரிகளுடன் ரெட்ரோ ஸ்டைலில் தோன்றுகிறார் கவின். சினிமாவில் ஹீரோவாகும் ஒரு இளைஞனின் கதையாக ஸ்டார் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிஃப்ட், டாடா படங்களின் வெற்றியால் கோலிவுட்டில் கவினுக்கு மிக முக்கியமான இடம் கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் கவின், இன்னும் சில இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X