நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி பண்ணதில்ல.. என்ன போய்... ஃபீலிங்கில் கவின்!
சென்னை: கவின் கவலையுடன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த அவரது ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் கவின். இதன் மூலம் பிரபலமான அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.
நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

காதல்
அதில் சக பெண் போட்டியாளர்களிடம் காதலிப்பதாக கடலை போட்டு வந்த கவின் கன்டென்ட்டுக்காக 4 பேரை காதலித்ததாக கூறினார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

வாய் திறக்கவில்லை
பின்னர் ஒரு வழியாக லாஸ்லியாவை சீரியஸாக காதலிப்பதாக கூறிய கவின், அவரிடம் நெருங்கி பழகினார். இருவரும் சீரியஸாக காதலிப்பதாக கூறிய நிலையில் பிக்பாஸ் விட்டை வெளியே வந்த பிறகு தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

கவின் போட்டோ
ஆனால் ரசிகர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவிடம் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவின் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன போய்..
அதாவது வொய்ட் ஷர்ட், பிளாக் பேண்ட் என செம ஃபார்மலில் டக்கின் செய்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் நான்லாம் இன்டர்வியூக்கு கூட இப்படி இன் பண்ணது இல்ல என்ன போய்.. என ஃபீலிங்குடன் கேப்ஷன் கொடுத்து போட்டோ எடுத்தவருக்கு டேக் செய்துள்ளார்.

செம க்யூட்..
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தாங்களும் தங்களின் கவலையை பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த காஸ்ட்யூமில் நீங்கள் செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











