பட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி!
கவினும், லாஸ்லியாவும் ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
kavin ,losliya in bigg boss kondattam
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்முறையாக கவினும், லாஸ்லியாவும் ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தால் கவிலியா ஆர்மி மகிழ்ச்சி அடைந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 3யில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஜோடி கவின் - லாஸ்லியா தான். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே, விருந்தினராக வந்த லாஸ்லியாவின் தந்தை இந்தக் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர்களது காதல் காட்சிகள் அங்கு தொடர்ந்தது. மக்களும் அதனை வெகுவாகவே ரசித்தனர்.
கவின் வெளியேறிய போது, லாஸ்லியா அழுததை மக்களை ரொம்பவே வருத்தப்பட வைத்தது. இதனால் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் இருவரும் எப்போது நிஜ வாழ்க்கையில் சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் இருந்து வந்தது.
{photo-feature}


Click it and Unblock the Notifications











