பிக் பாஸ் கவினின் மாஸ் லுக் போட்டோஷூட்.. டிரெண்டிங் பிக்ஸ் !
சென்னை : தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் கவின் இப்பொழுது வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் போட்டோ வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
Recommended Video
தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அது இரண்டு மடங்கு ஆகின.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது "லிப்ட்" என்ற திரைப்படத்தில் அமிர்தா ஐயர் உடன் நடித்து வருவதை தொடர்ந்து இவர் வெளியிட்டுள்ள இந்த வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர் பட்டாளத்தை
தொலைக்காட்சி நடிகர்களில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர்களில் மிக முக்கியமான நடிகர் கவின் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான கவின் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

ஹீரோவாக காண
இவ்வாறு சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த அதே சமயம் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்த கவினை பலரும் திரைப்படங்களில் ஹீரோவாக காண ஆவலாக இருந்த நிலையில் சென்ற ஆண்டு வெளியான "நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார்.

பல மடங்கு
இவ்வாறு தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வரும் கவின் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அனைவரையும் பாட்டு பாடி ஆடி மகிழ்வித்த தோடு, காதலில் விழுந்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தினார். எனினும் இவரது ரசிகர்கள் இவரை முன்பு இல்லாத அளவிற்கு பல மடங்கு தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவரது புகழ் மேலும் ஓங்கியது.

அமிர்தா ஐயருடன்
இவ்வாறு விஜய் டிவியின் ஆஸ்தான செல்ல பிள்ளையாக இருந்து வரும் கவின் பிகில் திரைப்படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற அமிர்தா ஐயருடன் இணைந்து இப்பொழுது " லிப்ட் " என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

என்னை அறிந்தால் விக்டர் கெட்டப்பில்
நீண்ட முடியுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது கவின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த நிலையில் இப்பொழுது அர்ஜுன் ரெட்டி போல நீண்ட முடி தாடியுடன் எடுத்த போட்டோவையும், மற்றும் முடியை ஸ்டேய்ட்னிங் செய்து என்னை அறிந்தால் விக்டர் கெட்டப்பில் இருக்கும் மற்றொரு போட்டோவையும் இணைத்து வெளியிட்டுள்ள வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி இருக்கும் நிலையில் இவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தவாறு இந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications