விஜய் மகன் படத்தில் கவின் நடிக்கிறாரா?.. ஜேசன் சஞ்சய் பற்றி ’ஸ்டார்’ ஹீரோ என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த கவின் அடுத்ததாக ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் தொடர்பான புரமோஷன்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளின் வெளியாகிறது. நேற்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தளபதி விஜய் போலவே கவின் நடந்து வருவதாகவும் ரசிகர்களை பார்த்து கை அசைப்பதாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் ட்விட்டர் பக்கத்தில் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கவின் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவதாக வலம் வரும் தகவல் உண்மையா என்கிற கேள்விக்கு ஒளிவு மறைவில்லாமல் பதிலளித்துள்ளார்.
கவின் சம்பளம்: நேற்று நடைபெற்ற ஸ்டார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினிடம் ஒரு படம் வெற்றி அடைந்த உடன் அதிகமாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது அது பற்றி உங்களின் கருத்து என்ன என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரின் மார்க்கெட் தெரியாமல் சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள். கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் என் சம்பளம் வெறும் 1000 ரூபாய் தான். அந்த சீரியல் முடிக்கும் போது என்னுடைய சம்பளம் 6000 ஆக மாறியது. ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு நீங்கள் சென்றால் கூட சம்பள உயர்வு எதிர்பார்க்கிறீர்களா மாட்டீர்களா என பதில் கேள்வி கேட்டு மடக்கி விட்டார்.
விஜய் மகன் இயக்கத்தில்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக போட்டோ உடன் அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் எப்போது துவங்கும் யார் ஹீரோ என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், ஜேசன் சஞ்சய் தன்னை வந்து சந்தித்து கதை சொன்னது உண்மைதான் என்றும் தான் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறினேன். அவரும் டிஸ்கஷன் விட்டு வருவதாக சொன்னார். அதன் பிறகு எதுவும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் எப்படி?: விஜய் சாரை பார்த்திருக்கேன் அவருடைய உச்சத்துக்கு எப்படியோ இருப்பார் என நினைப்போம். ஆனால், அவர் ரொம்பவே சாதாரணமாக கேஷுவலாக தான் இருப்பார். அவருடைய மகன் அவரை விட ரொம்பவே சிம்பிளாக சாதாரணமாக இருப்பதை பார்த்து இவ்ளோ பெரிய ஆட்களே இப்படித்தான் உள்ளனர். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். ஜேசன் சஞ்சய் குறித்து கவின் வெளிப்படையாக பேசி உள்ள நிலையில், விரைவில் அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் இருக்கும் என்றே தெரிகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றால் கவினின் மார்க்கெட் மேலும், உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. வரிசையாக இப்பவே 2 படங்களை முடித்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











