தரக்குறைவாக பேசிய நெட்டிசன்கள்.. ஒரே போட்டோவில் நச் பதில் கொடுத்த கவின்!
Recommended Video
சென்னை: தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேசிய நெட்டிசன்களுக்கு ஒரே ஒரு போட்டோவை போட்டு நச் பதில் கொடுத்துள்ளார் கவின்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் பெரும் சர்ச்சைகளுக்கு ஆளானார். கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் நான்கு பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்பதற்காகவும் நான்கு பெண்களை காதலித்ததாகவும் அவர் கூறினார்.
இதனை கேட்டு கமலே ஒரு நிமிடம் ஷாக்கானார். இதுதவறில்லையா என்று கேட்டும் அவரை கண்டித்தார் கமல். நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர் வைத்து அவர்களை கேவலமாக கிண்டல் செய்தார்.

மோசடி
கவினின் இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் திருச்சி நீதிமன்றம் கவினின் தாயார், கவினின் பாட்டி உட்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் நடந்து கொண்ட விதத்தால் கடுப்பில் இருந்த நெட்டிசன்கள், அவரின் தாயார் மோசடிப் புகாரில் கைதானதை வைத்து கழுவி ஊற்றினர்.

கவின் போட்ட போட்டோ
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய கவின், சிறையில் அடைக்கப்பட்ட அவரது தாயாரையும் உறவினர்களையும் ஜாமீனில் எடுத்துள்ளார் என தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, பதிலடி கொடுத்திருக்கிறார் கவின்.
அள்ளும் லைக்ஸ்
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கவின் போஸ்ட் செய்த இந்த போட்டோவை லைக் செய்துள்ளதுனர்.


Click it and Unblock the Notifications











