Kiss Twitter Review: படம் Worth ப்ரோ.. கவினின் கிஸ்க்கு இணையத்தில் குவியும் பாராட்டு!
சென்னை: நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள படம் கிஸ். இந்த படத்தில் கவின் கதநாயகனாகவும், அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் இன்று அதாவது, செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இணைய வாசி ஒருவர் கூறும்போது, படம் இந்த கால இளசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ரொமான்ஸ் மற்றும் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இசை சில இடங்களில் நன்றாக உள்ளது. கதையை இன்னும் கொஞ்சம் டெப்த்தாக எழுதி இருக்கலாம். ஒரு முறை பார்க்க ஒர்த்தான படம். ப்ரீத்தி படம் முழுவதும் அழகாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகரோ, " கவினின் நடிப்பு எப்போதும் போல நன்றாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்க நல்ல படம். முதல் பாதியை விட இரண்டாவது பாதி காமெடியாக நன்றாக உள்ளது. விடிவி கணேஷின் காமெடிக் காட்சிகள் தெறிக்க விடுகிறது. ப்ரீத்தி காதல் காட்சிகளில் அட்டகாசமாக வருகிறார். கவின் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளில் அசத்துகிறார். இயக்குநராக அறிமுகப் படத்திலேயே சதீஷ் ஒரு கிளாசியான முயற்சி எடுத்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











