“நாங்க ஏன் அந்த ரெட் கதவுகிட்டயே உட்காருவோம் தெரியுமா?” ‘அடேங்கப்பா’ விளக்கம் சொன்ன கவின்!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் எப்போதும் ஏன் அந்த சிவப்பு கதவுக்கு அருகில் உட்காருவோம் என்பது குறித்து கவின் விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலான நேரம் கவின் மற்றும் சாண்டி வாசலில் இருந்த சிவப்பு கதவருகில் தான் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் நேரத்திற்கு தகுந்த மாதிரி லாஸ்லியா அல்லது தர்ஷன் மற்றும் முகென் உடன் இருப்பர்.
கமல் கூட ஒருமுறை எப்போதும் அங்கேயே அமர்ந்திருக்கிறீர்களே என கிண்டலாகக் கேட்டார். ஆனால் போட்டியாளர்கள் சமாளித்து விட்டனர்.

சிவப்புக் கதவு ரகசியம்
இந்நிலையில் வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக சிவப்புக் கதவருகே அமர்ந்திருந்ததன் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார் கவின். அதில் அவர், "அந்த சிவப்பு கேட்டுக்கும், உட்காருர திண்டுக்கும் இடைல ஒரு இடைவெளி இருக்கும். அதுல வெளில இருந்து ஜில்னு ஏசி காத்து வரும்.

ஏசி காத்து
அது அப்டியே பின் பக்கமா மேலே வந்து, கழுத்துல ஜில்லுனு படும். அதுக்காகத் தான் ஆரம்பத்துல அந்த கதவுகிட்ட உட்கார ஆரம்பிச்சோம். அது அப்டியே பழகிடுச்சு. எங்களோட மீட்டிங் பாயிண்டாவே அது ஆகிடுச்சு.

இதுவும் காரணம்
அதே மாதிரி பிக் பாஸ் வீட்டோட வேற எந்த இடத்துல இருந்தாலும் எல்லா இடத்தையும் கவனிக்க முடியாது. ஆனா, அந்த கதவுகிட்ட உட்கார்ந்தா, யாரு பாத்ரூம் போறா, கிச்சன்ல என்ன பண்றாங்கனு வீடு புல்லா நல்லா பார்க்கலாம்.

கண்காணிப்போம்
அதனால தான், அங்க உட்கார்ந்து நாங்க வீட்டை கண்காணிப்போம். அப்டியே அந்த இடம் எங்க ஆஸ்தான இடமா ஆகிடுச்சு" எனக் கூறியுள்ளார் கவின். அந்த சிவப்பு கதவுக்கு பின்னாடி இப்டி பல காரணங்களா என பிக் பாஸ் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











