Dada Review: கவின் கலக்கிட்டாரு.. அபர்ணா தாஸ் அசத்தல்.. டாடா படம் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள டாடா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ப்ரீமியர் ஷோ படத்தை பார்த்த பல விமர்சகர்களும் படத்தை பாராட்டித் தள்ளி உள்ளனர். லிஃப்ட் படத்திற்கு பிறகு கவின் நடிப்பில் வெளியாகி உள்ள டாடா திரைப்படம் ரொம்பவே ஃபிரெஷ்ஷா இருக்கு என பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

நெட்டிசன்கள் அந்த படத்தை பற்றி என்ன விமர்சனத்தை கொடுத்துள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

டான் இயக்குநர் விமர்சனம்

டான் இயக்குநர் விமர்சனம்

டாடா படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்த சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், டாடா திரைப்படம் சிறப்பான திரைக்கதையுடன் ஃபீல் குட் டிராமாவாக உருவாகி உள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரது நடிப்பும் அபாரம். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வாழ்த்துக்கள் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

தனஞ்செயன் ட்வீட்

தனஞ்செயன் ட்வீட்

சினிமா விமர்சகரும் டிராக்கருமான தனஞ்செயன் டாடா திரைப்படம் அழகான, இளைஞர்களை கவரக் கூடிய எமோஷனல் படம். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவுக்கு பாராட்டுக்கள். கவின் மற்றும் அபர்ணா தாஸின் நடிப்பு சிறப்பாக உள்ளது. மெச்சூர் கன்டென்ட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ள ஒலிம்பியா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

கவின் கலக்கிட்டாரு

கவின் கலக்கிட்டாரு

இசையமைப்பாளர் மெர்வின் சாலமன் டாடா படத்தை பார்த்து விட்டு கவின் கலக்கிட்டாரு, என்னவொரு இதயப்பூர்வமான நடிப்பு என பாராட்டி உள்ளார். டாடா திரைப்படம் நிச்சயம் இளைஞர்களை மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 பிளாக்பஸ்டர் டாடா டே

பிளாக்பஸ்டர் டாடா டே

பிக் பாஸ் மூலம் பிரபலமான விஜய் டிவி புகழ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள டாடா திரைப்படம் கன்ஃபார்ம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ஏகப்பட்ட கவின் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை கமெண்ட்டுகளாக போட்டு வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு

பொதுவாகவே கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றி வரும் ப்ளூ சட்டை மாறன் நல்ல படங்களை பாராட்டாமல் இல்லை. இந்நிலையில், கவினின் டாடா படத்திற்கு விமர்சனம் சொல்லியுள்ள ப்ளூ சட்டை மாறன் படம் நல்லா இருக்கு என்றும், கெஸ் பண்ணக் கூடிய கதையை வைத்துக் கொண்டு அதில் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக ஃப்ரெஷ்ஷான காட்சிகளை வைத்து கலக்கிட்டாங்க என பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X