பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு கவின் போட்ட முதல் போஸ்ட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட முதல் பதிவு வைலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமானவர் கவின். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்தகொண்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே கடலை போட தொடங்கிய அவர், பின்னர் சாக்ஷி, லாஸ்லியா என மாறி மாறி காதலித்தார். அதோடு பிக்பாஸ் வீட்டில் இருந்தது மொத்த ஹவுஸ்மேட்ஸையும் வயது வித்தியாசம் இன்றி பட்டப் பெயர் வைத்து கிண்டல் செய்தார்.

வெளியேறிய கவின்
இதனால் அவரது பெயர் நாறிப்போனது. சமூக வலைதளங்களிலும் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் இன்ஸ்டாகிராமில் தனது முதல் போஸ்ட்டை பதிவிட்டிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது, எனக்கு எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. இந்த செய்தியை பிகிபாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது எனக்கு இப்போது இருக்கும் பிரச்னைகள் முடிந்த பிறகு உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

முயற்சிகள் எல்லாம் தோல்வி
முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என் வாழ்நாளில் மிகவும் பலவீனமான காலக்கட்டத்தில் இருந்தேன். என்னுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. இதனால் என்னை வெளிப்படுத்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தோடு சென்றேன்.

பணமும் புகழும்தான்..
அதைத் தவிர நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் பணமும் புகழும் இந்த நிகழ்ச்சியின் மூலம் எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது நான் பார்க்கும் சில விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எனக்கு இப்போது எதிர்பாராத சில பிரச்னைகள் இருக்கிறது. இதன் காரணமாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு என்னால் முழுதாக நன்றியை தெரிவிக்க முடியவில்லை
பதில் அன்பு காட்டுவதற்கு
நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கும் பதில் அன்பு காட்டுவதற்கு முன்பாக எனது குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.

நியாயப்படுத்தவில்லை..
இது எல்லாவற்றிருக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ. எனக்கு அது தெரிந்தாலும் சில இடங்களில் நான் எமனோஷனல் ஆகிவிட்டேன். நான் செய்த சில விஷயங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை காயப்படுத்திருந்தால் அதை நான் நியாயப்படுத்தவில்லை.

வெறுப்பையும் ஏற்கிறேன்
நீங்கள் என் மீது அன்புக்கு நான் ஏற்றுக்கொண்டதை போல சிலர் காட்டிய வெறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் சிலர் என் மீது காட்டிய வெறுப்பையும் அன்பாக மாற்ற முயற்சி செய்வேன்.

மன்னித்துவிடுங்கள்
போட்டியில் பங்கேற்ற 17 பேருக்கும் சரியான பாடத்தை நீங்கள் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். இதோடு முடியப்போவதில்லை, நீங்கள் காட்டிய அன்புக்கு நான் கடன்பட்டுள்ளேன். என்னை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

நல்லா இருப்போம்
ஒரு வேலை உங்க யாரையாவது நான் காயப்படுத்தியிருந்தால் ரொம்ப சாரி. எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம் இவ்வாறு கவின் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











