ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்!
சென்னை: பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட செம அசத்தலாய் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவினுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி வினீத் பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் கமிட்டானார் கவின்.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

6 இயக்குநர்கள்
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று கவின் நேற்றே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட உள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வெளியானது மோஷன் போஸ்டர்
இந்நிலையில் அறிவித்தப்படியே இன்று மாலை கவின் நடித்துள்ள லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.
காத்திருக்க வொர்த்துதான்
நெல்சன் திலீப்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் கவினுக்கும் அம்ரிதாவுக்கும் மற்றும் மொத்த படக்குழுவுக்கும் ஆல் தி பெஸ்ட் என்றும் படத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். இதேபோல் ரவிக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த லிஃப்ட் காத்திருக்க வொர்த்துதான், இந்த மோஷன் போஸ்டர் லாஞ்ச் செய்வதில் ஹேப்பிதான் என தெரிவித்துள்ளார்.
ரத்தம் சொட்ட சொட்ட
இதேபோல் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆல் தி பெஸ்ட் கவின் மற்றும் படக்குழு என்று குறிப்பிட்டுள்ளார். இதில் கட்டடத்தின் பேஸ்மென்ட் பார்க்கிங் ஏரியாவில் உள்ள லிஃப்ட், ரத்தக்கறை படிந்த கத்தி, ரத்தம் சொட்ட சொட்ட கவின், அம்ரிதா என மிரட்டலாக உள்ளது மோஷன் போஸ்டர். இதனை பார்த்த நெட்டிசன்கள் த்ரில்லர் படமாக இருக்கும் போல என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











