Kavin Salary: ஒரு படம் தான் ஹிட்... அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா... தயாரிப்பாளரை அதிர வைத்த கவின்
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
டாடா வெற்றிக்குப் பின்னர் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன.
சில முன்னணி இயக்குநர்களும் கவினுக்கு கதை கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு கவின் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உள்ளாராம்.
கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கும் கவின்
விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். அதேபோல், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால், ஹீரோவாக சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கெஸ்ட் ரோல்களில் மட்டுமே கவின் நடித்து வந்தார்.
இந்நிலையில், கவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான லிஃப்ட், டாடா திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லிஃப்ட் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரியில் ரிலீஸான டாடா, கவினுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பலரும் டாடா படத்தை பாராட்டியிருந்தனர். இதனால், கவினைத் தேடி மேலும் சில பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க ரெடியாக இருந்தார்.
ஆனால், கவின் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை 1 கோடிக்கு கமிட் செய்திருந்த தயாரிப்பாளர் தற்போது கவின் படத்தை ட்ராப் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரேயொரு படம் ஹிட் கொடுத்துவிட்டு இப்படி கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டால் கவின் மார்க்கெட் அவ்வளவு தான் என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. டாடா படத்திற்காக சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கியிருந்தாராம் கவின்.

இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்தப் படத்தில் கவினின் சம்பளம் செட்டாகிவிட்டால் இம்மாதம் இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. கவின் - சதீஷ் இணையும் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் வெளியான அயோத்தி படத்தில் ஷிவானி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ப்ரீத்தி அஸ்ரானி.


Click it and Unblock the Notifications











