Kavin: ஹனிமூன் போகாம இன்ஸ்டாவில் என்ன பண்ணிட்டு இருக்காரு கவின்.. டிரெண்டாகும் திருமண வீடியோ!
சென்னை: காதலி மோனிகாவை திருமணம் செய்துகொண்ட நடிகர் இந்நேரம் ஹனிமூனுக்கு கிளம்பி சென்றிருப்பார் என எதிர்பார்த்தால், இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
விஜய் டிவி சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் சினிமாவில் யங் சார்மிங் ஹீரோவாக வலம் வருகிறார்.

லிப்ட் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்து ஹிட் அடித்தது.
காதலியை கரம்பிடித்த கவின்: நடிகர் கவின் லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டில் காதலித்த நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர். சினிமாவிலாவது இருவரும் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சட்டென தனது திருமணத்தையே நடத்தி முடித்து விட்டார் கவின்.

பள்ளியில் பணியாற்றி வந்த தனது தோழி மோனிகாவை திருமணம் செய்துக் கொண்ட கவின் அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
திருமணத்தில் குவிந்த இயக்குநர்கள்: நடிகர் கவின் மற்றும் மோனிகா திருமணத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கவினின் நெருங்கிய நண்பரும் ஜெயிலர் பட இயக்குநருமான நெல்சன் தனது மனைவி மற்றும் மகனுடன் கவின் திருமணத்தில் கலந்துக் கொண்டார்.

மேலும், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். டாக்டர், டான், கேப்டன் மில்லர் படங்களின் ஹீரோயின் பிரியங்கா மோகனும் கவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருமண வீடியோ: எளிமையாகவும் வித்தியாசமான முறையில் கவின் - மோனிகா திருமணம் சூப்பரான லொகேஷனில் நடைபெற்ற நிலையில், அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவின் பதிவிட்டுள்ளார்.
மோனிகாவை திருமணம் செய்து கொண்டது மற்றும் சினிமா பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த காட்சிகளை எடிட் செய்து "ஞாயிறு என்பது பெண்ணாக" எனும் பழைய பாடலுடன் மிக்ஸ் செய்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், அதற்கு கேப்ஷனாக "Got a friend till end" என கடைசி வரை என்கூடவே இருக்கும் ஒரு நல்ல தோழி மனைவியாக கிடைத்திருக்கிறாள் என பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











