Bloody Beggar Day 3 Collection: வசூலில் சொல்லி அடிக்கும் கவின்.. மூன்றே நாளில் கல்லா கட்டி அசத்தல்!
சென்னை: கவின், ராதா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ப்ளடி பெக்கர். தமிழ் சினிமாவில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே மூன்று விதமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்ததால் ரசிகர்கள் மூன்று படங்களையும் பார்க்க ஆவலாக இருந்தார்கள். இதில் கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படத்தின் பட அறிவிப்பில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் மூன்று நாட்களில் படம் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமாரிடம் நீண்டகாலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். மேலும் இந்தக் கதாபாத்திரம் படம் தொடங்கி முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றாலும், அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார் கவின்.

படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமாக இருப்பது, ரெடின் கிங்ஸ்லி. இந்தப் படத்தில் ஆவியாக வரும் இவரது நடிப்பு ஓ.கே ரகம்தான் என்றாலும், காமெடி சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்கள் மனம் நொந்து கூறினார்கள். அதேநேரத்தில் படத்தில் பாடல் எதுவும் இல்லாதது படத்திற்கு குறையாக இல்லை என்றாலும், ஒரு முழு படமாக சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.
மூன்று படங்கள்: ஏற்கனவே கூறியதைப்போல், தமிழ் சினிமாவில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த மூன்று படங்களில் மிகக் குறைந்த பட்ஜெட் படம், சிறிய டீம் கொண்ட படம் என்றால் அது கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளடி பெக்கர் படம்தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. அதனையடுத்து ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தது.

ஹவுஸ் ஃபுல் : இதில் மிகக் குறைந்த அளவிலான தியேட்டர்களில் வெளியான படம் என்றால் அது ப்ளடி பெக்கர்தான். அதேநேரத்தில் குறைந்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, ரிலீஸ் ஆன தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ப்ளடி பெக்கர். படத்தினைப் பொறுத்தவரையில் பெரிய அளவிலான லொகேஷன்கள் என எதுவும் இல்லை. படத்தின் 80 சதவீத காட்சிகள் ஒரு பெரிய பங்களாவில் மட்டுமே நடைபெறுகின்றது.

வசூல்: அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் கவினின் நடிப்பு சில இடங்களில் புல்லரிக்கின்றது என ரசிகர்களே கருத்து தெரிவிக்கின்றனர். முதல் நாளில் ரசிகர்களின் விமர்சனங்களைக் கேட்டபின்னர், பொதுமக்கள் மத்தியில் ப்ளடி பெக்கர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூல் அதிகரித்துள்ளது. படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 10 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. படத்தின் மொத்த பட்ஜெட்டே கிட்டத்தட்ட 10 கோடிகள் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் படம் வசூல் ரீதியாக ஹிட் படமாக உருவெடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











