Bloody Beggar Box Office Day 4:பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அடிவாங்கத் தொடங்கிய ப்ளடி பெக்கர்! 4 நாள் விபரம்

சென்னை: கவின், ராதா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ப்ளடி பெக்கர். தமிழ் சினிமாவில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே மூன்று விதமான கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்ததால் ரசிகர்கள் மூன்று படங்களையும் பார்க்க ஆவலாக இருந்தார்கள். இதில் கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படத்தின் பட அறிவிப்பில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நான்கு நாட்களில் படம் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமாரிடம் நீண்டகாலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். மேலும் இந்தக் கதாபாத்திரம் படம் தொடங்கி முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றாலும், அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார் கவின்.

kavin bloody beggar bloody beggar

படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமாக இருப்பது, ரெடின் கிங்ஸ்லி. இந்தப் படத்தில் ஆவியாக வரும் இவரது நடிப்பு ஓ.கே ரகம்தான் என்றாலும், காமெடி சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்கள் மனம் நொந்து கூறினார்கள். அதேநேரத்தில் படத்தில் பாடல் எதுவும் இல்லாதது படத்திற்கு குறையாக இல்லை என்றாலும், ஒரு முழு படமாக சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

சிறிய டீம்: ஏற்கனவே கூறியதைப்போல், தமிழ் சினிமாவில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த மூன்று படங்களில் மிகக் குறைந்த பட்ஜெட் படம், சிறிய டீம் கொண்ட படம் என்றால் அது கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளடி பெக்கர் படம்தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. அதனையடுத்து ஜெயம் ரவியின் ப்ளடி பெக்கர் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தது.

kavin bloody beggar bloody beggar

வரவேற்பு : இதில் மிகக் குறைந்த அளவிலான தியேட்டர்களில் வெளியான படம் என்றால் அது ப்ளடி பெக்கர்தான். அதேநேரத்தில் குறைந்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, ரிலீஸ் ஆன தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ப்ளடி பெக்கர். படத்தினைப் பொறுத்தவரையில் பெரிய அளவிலான லொகேஷன்கள் என எதுவும் இல்லை. படத்தின் 80 சதவீத காட்சிகள் ஒரு பெரிய பங்களாவில் மட்டுமே நடைபெறுகின்றது.

kavin bloody beggar bloody beggar

வசூல்: அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் கவினின் நடிப்பு சில இடங்களில் புல்லரிக்கின்றது என ரசிகர்களே கருத்து தெரிவிக்கின்றனர். முதல் நாளில் ரசிகர்களின் விமர்சனங்களைக் கேட்டபின்னர், பொதுமக்கள் மத்தியில் ப்ளடி பெக்கர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூல் அதிகரித்துள்ளது. படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 12 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. படத்தின் மொத்த பட்ஜெட்டே கிட்டத்தட்ட 10 கோடிகள் தான் எனக் கூறப்படும் நிலையில் படம் லாபங்களை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றது. ஆனால் படம் நான்காவது நாளில் வசூல் ரீதியாக சரிவைச் சந்தித்துள்ளது. நான்காவது நாளில் மட்டும் படம் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும் படம் வசூல் ரீதியாக ஹிட் படமாக உருவெடுத்துள்ளது.

kavin bloody beggar bloody beggar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X