Star Box Office Prediction: செம ரெஸ்பான்ஸ்.. முதல் நாளில் அரண்மனை 4 வசூலை தாண்டுமா ஸ்டார்?

சென்னை: ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மேலும் உயர்த்திக் கொண்டே செல்லும் கவின் ஸ்டார் படத்தில் சிறந்த நடிகராகவே மாறி உள்ளார். சினிமா விரும்பிகளுக்கான படமாக ஸ்டார் உருவாக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடினால் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறிவிடும்.

முதல் நாளில் அந்த கொண்டாட்டம் மக்கள் மத்தியில் நிறையவே தென்படுகிறது. ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு பொதுமக்கள் பலரும் கவினின் நடிப்பையும் இயக்குநர் இளனின் திரைக்கதையையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Kavin Star Movie Day 1 Box Office Prediction is here

அனைத்துக்கும் மேலாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் செய்துள்ள மேஜிக்கை பார்த்து ரசிகர்கள் புல்லரித்துப் போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எந்த அளவுக்கு இருக்கும்? அதன் டிக்கெட் ப்ரீ புக்கிங் நிலவரம் என்ன? அரண்மனை நாடு படத்தின் முதல் நாள் வசூலை உண்டுமா என்பது குறித்து இங்கே காணலாம்.

பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்: கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் இரண்டாம் பாதையில் லேசான தொய்வு இருந்தாலும் முதல் பாதி முழுக்க விறுவிறுப்பாக சென்ற நிலையில், படத்தின் கிளைமேக்ஸ் மீண்டும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டதாக படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கவினுக்கு வெற்றி: பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளனுக்கும் டாடா படத்தை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்துள்ள கவினுக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்த படம் மாறும் என ரசிகர்கள் பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

டிக்கெட் முன்பதிவு: சுமார் 1.5 கோடி வரை கவின் நடித்துள்ள ஸ்டார் படத்துக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவினுக்கு இந்த படம் நல்ல ஓபனிங் படமாக அமையும் என்றும் அதற்கு காரணம் படத்தின் டிரைலர் தான் என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் வசூல் கணிப்பு: டிக்கெட் முன் பதிவிலேயே 1.5 கோடி ரூபாய் வசூலை கவினின் ஸ்டார் படம் பெற்றால், முதல் நாள் வசூல் 2 முதல் 3 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், அரண்மனை 4 மற்றும் கில்லி ரீ ரிலீஸ் படங்கள் முதல் நாளில் 4 கோடி வசூல் செய்த அளவுக்கு இந்த படம் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகின்றார். ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் படம் பிக்கானால் இந்த படமும் டாடா படத்தை போல 50 கோடி ரூபாய் வசூலை ஈட்ட வாய்ப்புகள் உள்ளன.

நெல்சன் தயாரிப்பில்: ஸ்டார் படத்தை தொடர்ந்து கவின் அடுத்ததாக நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டார் படத்தில் சீரியஸாக கவின் நடித்த நிலையில், பிளடி பெக்கர் திரைப்படம் காமெடி படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டின் அடுத்த எமர்ஜிங் ஸ்டாராக கவின் மாறிவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X