ஒரு நாயகன் உதயமாகிறான்.. ப்பா.. என்னா நடிப்புடா சாமி.. கவின் நடித்துள்ள ’ஸ்டார்’ டிரெய்லர் ரிலீஸ்!
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் தரமான சம்பவமாக கவின் நடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படம் இருக்கும் என்பதை தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ஆணித்தரமாக தெரிவிக்கிறது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹங்கர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
4 மாதங்களாக சொதப்பல்: சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அடுத்தடுத்து வெளியான முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின.
கல்லா கட்டவில்லை: அசோக்செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம், ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், மணிகண்டன் நடித்த லவ்வர், சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, விஜய் ஆண்டனியின் ரோமியோ, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல், கள்வன் மற்றும் டியர், இந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள விஷாலின் ரத்னம் உள்ளிட்ட பல படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெறவில்லை.
மாஸ் காட்டிய மலையாள படங்கள்: தமிழ் படங்கள் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்ட போராடி வந்த நிலையில் மலையாள படங்கள் அசால்டாக இந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பல படங்கள் பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம், வருஷங்களுக்கு விசேஷம் என வரிசையாக மலையாளத்தில் பலவற்றை படங்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில ஹிட் படங்கள் வெளியாகி உள்ளன.
கவினின் ஸ்டார்: அடுத்த வாரம் அரண்மனை 4 படம் சம்மர் கொண்டாட்டமாக வெளியாக காத்திருக்கிறது. ஆனால் அந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பது சந்தேகம் தான். ஒரு மே 10 ஆம் தேதி சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு', அமீர் நடித்துள்ள ' உயிர் தமிழுக்கு' உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக கவின் அடித்துள்ள ஸ்டார் திரைப்படமும் வெளியாகிறது.
மிரட்டலான டிரெய்லர்: இந்த ஆண்டு இதுவரை வெளியேயான படங்களின் டிரெய்லர் கூட ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காமெடி படமாக வரும் நினைத்து பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு தரமான சம்பவத்தை கவின் கொடுக்க காத்திருக்கிறார் என்பதை டிரெய்லரை பார்த்தாலே தெரிந்து விடும். அதிலும், அந்த கடைசி ஷாட் எல்லாம் கண் கலங்க வைக்கிறது.
டாடாவை போல: கடந்த ஆண்டு கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தொங்கிக் கிடக்கும் தமிழ் சினிமாவை கில்லி ரீ ரிலீஸுக்கு பிறகு கவினின் ஸ்டார் படம் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











