லாஸ்லியாவ லவ் பண்றீங்களா.. சிங்கிளா.. கமிட்டடா? ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கவின் பரபரப்பு பதில்!
Recommended Video
சென்னை: லாஸ்லியாவுடன் காதலில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பிக்பாஸ் கவின் பதில் அளித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவருக்கு சின்னத்திரையில் முகவரி கொடுத்தது விஜய் டிவிதான்.
தொலைக்காட்சி சீரியல்களில் தலைக்காட்டி வந்த கவின், தற்போது படங்களிலும் கமிட்டாகி வருகிறார். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார்.

சைக்கிள் குள்ளச்சி
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின். அதில் தன்னைவிட சீனியர்கள் என்றும் பாராமல் போட்டியாளர்கள் அனைவருக்கும் பட்டப் பெயர் வைத்தார் கவின். இயக்குநர் சேரனுக்கு சைக்கிள் என்றும் நடிகை மதுமிதாவுக்கு குள்ளச்சி என்றும் கஸ்தூரிக்கு காக்கா என்றும் பட்டப் பெயர் வைத்து விமர்சித்தார்.

சாக்ஷியுடன் காதல்
மேலும் இயக்குநர் சேரன் குறித்தும் கஸ்தூரி குறித்தும் தரக்குறைவாக பேசினார் கவின். அதோடு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே கடலை போட்டு வந்தார். பின்னர் சாக்ஷி அகர்வாலை காதலிப்பதாக கூறினார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனாலும் லாஸ்லியாவுடனும் சைடில் கடலை போட்டு வந்தார் கவின்.

லாஸுடன் காதல்
இதனால் கவினுடனான காதலை முறித்துக்கொண்டார் சாக்ஷி. இதனை தொடர்ந்து ரூட் கிளியர் என்று எண்ணிய, கவின் லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். இருவரும் உருகி உருகி காதலித்தனர். லாஸ்லியா உடனான காதலால் சேரனை பகையாளியாக பார்த்தார் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சேரனை உதறி தள்ளினார் லாஸ்லியா.

வாய் திறக்கவில்லை
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, காதலித்த இருவரும் வெளியே போய் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போவதாக கூறினர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை.

பட்டியல்
கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு அவர்களின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் ஆர்மியினர் காதலுக்கு ஆதரவாக டிவிட்டினர். மேலும் கவின் லியா ஆர்மி என்ற ஆர்மியையும் தொடங்கினர். இந்நிலையில் கவின் அண்மையில்கவினுக்கு 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது. அந்த வலைத்தளத்திற்கு கவின் பேட்டி அளித்துள்ளார்.

கவின் பதில்
அதில் நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிங்கிள் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார் கவின். கவின் கூறிய பதிலால் கவின் ரசிகர்கள் மட்டுமின்றி லாஸ்லியாவின் ரசிகர்களும் ஆர்மியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிய ரசிகர்களுக்கு கவினின் பதில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











