லாஸ்லியா ஃபேன்ஸ்.. காதலர் தினத்தை கவின் யாருகூட கொண்டாடியிருக்காரு பாத்தீங்களா.. ரைவலாகும் போட்டோ!

Recommended Video

Losliya Traditonal Photoshoot | Friendship | Aari Arjuna | Photoshoot

சென்னை: காதலர் தினத்தில் கவின் பதிவிட்ட இன்ஸ்டா போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின். இதில் சக பெண் போட்டியாளர்களுடன் கடளை போடுவதையே வாடிக்கையாக கொண்டார்.

கழட்டிவிட்ட கவின்

கழட்டிவிட்ட கவின்

பின்னர் சாக்ஷியை காதலித்தார் கவின். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில் லாஸ்லியா, கவினிடம் வழியத் தொடங்கினார். எப்போது கவினிடம் கடலை போட விரும்பினார் லாஸ்லியா. இதனால் மெல்ல சாக்ஷியை கழட்டி விட்ட கவின் லாஸ்லியாவின் காதலை ஏற்றார். பின்னர் கவினும் லாஸ்லியாவும் காதலிக்க தொடங்கினர்.

டபுள் மீனிங் டயலாக்

டபுள் மீனிங் டயலாக்

அடிக்கடி டபுள் மீனிங் டயலாக்கில் பேசுவது, எப்போதும் தனியாக அமர்ந்து கடலை போடுவது நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை கழட்டிவிட்டு தனிமையில் பேசுவது என தங்களின் காதலை தீவிரமாக வளர்த்தனர். கவினுடனான காதலால் சேரப்பா சேரப்பா என்று பாசமாக அழைத்து வந்த இயக்குநர் சேரனையும் தூக்கி எறிந்தார் லாஸ்லியா.

கோபம் கொண்ட அப்பா

கோபம் கொண்ட அப்பா

பல இடங்களில் கவினுக்காக சேரப்பாவை விட்டுக்கொடுத்தார் லாஸ்லியா. கவின்தான் உலகம் என்றிருந்தார் லாஸ்லியா. கவினுடனான லாஸ்லியாவின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கவினுடன் ரொமான்ஸ் செய்த ஒரே காரணத்தினால் பத்தாண்டுகளுக்கு பிறகு பார்த்த மகளை ஏறெடுத்து பார்க்கவில்லை லாஸ்லியாவின் அப்பா.

கவினுக்காக கண்ணீர்

கவினுக்காக கண்ணீர்

இதனால் கதறி அழுதார் லாஸ்லியா, கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிய போது கூட அவர் இல்லாமேல் என்னால் இருக்க முடியாது என்னையும் வெளியேற்றுங்கள் என்று பிக்பாஸிடம் கண்ணீர் விட்டார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்தார் லாஸ்லியா. இந்நிலையில் பிக்பாஸ் ஃபைனல் முடிந்து வெளியே வந்தார் லாஸ்லியா.

காதலுக்காக ஆர்மி

காதலுக்காக ஆர்மி

ஆனால் அதன் பிறகு கவினுடான காதல் குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றப் போது கூட கவினிடம் பேசாமல் தவிர்த்து வருகிறார் லாஸ்லியா. தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளார் லாஸ்லியா. கவின் - லாஸ்லியா காதலுக்காக ஆர்மி ஆரம்பித்து ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் அவர்களின் காதலின் தற்போதைய நிலை குறித்து எவ்வளவோ கேட்டனர்.

சிங்கிள் தான்

சிங்கிள் தான்

ஆனால் லாஸ்லியா அதுபற்றி மூச்சு விடவில்லை. அண்மையில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த கவின் தற்போது தான் சிங்கிள் என்று கூறினார். இதனால் லாஸ்லியாவுடனான காதல் முறிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காதலர் தினத்தை முன்னிட்டு கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கவினின் போட்டோ

கவினின் போட்டோ

மேலும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார் கவின். அதில் ஒரு கிளாஸில் இரண்டு ஸ்டாக்களை போட்டு தனது நண்பருடன் குடிக்கிறார் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினுக்கு பளார் விட்ட நண்பர்தான் அவர். அந்த போட்டோவுக்கு காலம் முழுக்க என் வேலன்டைன்ஸ்டே உன் கூட தான்னு இருக்கும்னா அதை யாரால மாத்த முடியும் என பதிவிட்டுள்ளார்.

பொய் சொல்லாதீங்க

ஆனால் கவினின் இந்த பதிவை ரசிகர்கள் நம்ப மறுத்து வருகின்றனர். கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே இன்னமும் ரகசிய காதல் உள்ளது, ஏதோ ஒரு கட்டாயத்தினால் வெளியே சொல்ல மறுக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் பொய் சொல்லாதீங்க என்றும், இப்படியே பொய் சொல்லி எங்களை ஏமாத்துங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X