Kavin - ஹலோ நான் கவின் பொண்டாட்டி.. லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்த மோனிகா?

சென்னை: Kavin (கவின்) கவினின் மனைவி மோனிகா பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். ஆனால் அவருக்கு எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

Kavin Wifes Monicka Instagram Post Goes on Viral

டாடா கொடுத்த திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

கமல் - கவின்: படம் கதை ரீதியாக எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவு கவினின் நடிப்பும் பலரால் கொண்டாடப்பட்டது. மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் கவினை நேரில் அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமின்றி அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் கவின் உற்சாகத்தில் இருக்கிறார்.

Kavin Wifes Monicka Instagram Post Goes on Viral

திருமணம்: இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு கடந்த 20ஆம் தேதி திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லாஸ்லியா போஸ்ட்: கவினுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானவுடன் பலரும் லாஸ்லியா குறித்தெ எபேசினர். ஆனால் ஓபன் ஸ்டேட்மெண்ட் எதையும் லாஸ்லியா தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்று கவின் திருமண நாள் அன்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இணையத்தில் ட்ரெண்டானது.

Kavin Wifes Monicka Instagram Post Goes on Viral

மோனிகா இன்ஸ்டா: இந்நிலையில் மோனிகா டேவிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் கவின் கட்டிய தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் அதிகாரப்பூர்வமாக கவினின் மனைவி என குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து லாஸ்லியாவுக்குத்தான் மோனிகா பதிலடி கொடுத்திருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே லாஸ்லியாவும், மோனிகாவும் ஏற்கனவே தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X