திடீரென டிரெண்டாகும் பிக்பாஸ் கவின் ஹாஷ்டேக்.. காரணம் என்ன தெரியுமா?

Recommended Video

Kavin - Most desirable man on TV 2019

சென்னை: ட்விட்டரில் திடீரென காலை முதல் #kavinfans என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான கவின் தொடர்ந்து நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதன் பிறகு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினர்.

லாஸ்லியாவுடன் லவ்

லாஸ்லியாவுடன் லவ்

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்திற்கு பிறகு, அடுத்தடுத்து படங்கள் கிடைக்காத நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ம் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. கவினுக்கு பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் மலர்ந்த காதல் அவருக்கு நிறைய ரசிகர்களை ஈட்டித் தந்தது.

திடீர் டிரெண்ட்

பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை முகேன் ராவ் வென்றாலும், அதிகளவில் ரசிகர்களை ஈட்டியது என்னவோ கவின் தான். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சிறந்த டிவி பிரபலம் பட்டியலில் கவினுக்கு முதலிடம் கிடைத்துள்ள நிலையில், கவின் ரசிகர்கள் #kavinfans என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த லுக் பிடிச்சிருக்கா

கவின் ஹாஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இந்த ரசிகர், கவினின் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கவினின் இந்த லுக் பிடிச்சிருக்கா என கேள்வி எழுப்பியுள்ளார். கோட் சூட்டில் ஹேண்ட்ஸ்ம் ஆக இருக்கும் கவினின் இந்த லுக்கிற்கு ரசிகர்கள் ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் கவின் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலான நிலையில், கவினுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பயங்கர சப்போர்ட் செய்து வருகின்றனர். தற்போது MostDesirableManOnTV2019 என்ற பட்டம் கவினுக்கு கிடைத்துள்ள நிலையில் எஸ்.கே. ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தூக்குடா காலர

பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு விருது கிடைத்துள்ளது கவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த தீவிர கவின் ரசிகர், தூக்குடா காலர.. முடிஞ்சது ஏழரை.. என்று பஞ்ச் வசனத்துடன் ட்வீட் போட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டு இதை விட இன்னும் பல பெரிய விருதுகள் உங்களுக்கு கிடைக்கும் கவின் என்றும் வாழ்த்தியுள்ளார்.

கவின் – லாஸ்லியா

சிறந்த டிவி ஆண் பிரபலம் பட்டியலில் கவின் முதலிடத்திலும், சிறந்த டிவி பெண் பிரபலம் பட்டியலில் லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதுகுறித்து கவின் மற்றும் லாஸ்லியா அப்பாவித் தனமாக உரையாடிக் கொள்வது போன்று இந்த ரசிகர் ஒரு வித்தியாசமான ட்வீட்டை பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவை முந்தி முதலிடத்தில் நக்‌ஷத்ரா இடம்பிடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X