சதமடித்த கவிஞர் சினேகனின் தந்தை.. பேத்தியோடு செம கொண்டாட்டம்.. வீடியோ நல்லா இருக்கு!

சென்னை: பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர். ஆராரிராரோ என்ற ஒற்றைப் பாடல் போது அவரை காலம் கடந்தும் கொண்டாட வைக்க. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது குழந்தையை அவரது தந்தையின் மடியில் அமரவைத்து," என்ன சொல்றா பேத்தி" எனக் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், அவர் 100 வயதைக் கடந்தவர் என்றும் சினேகன் குறிப்பிட்டுள்ளார்.

தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் கொண்ட இவர், 11 வயதில் மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதலிடம் வென்று, அன்றைய முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரிடம் பெற்றார். அதன் பின்னர் சென்னைக்கு வந்து, பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றினார். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1997-ல் வெளியான புத்தம் புது பூவே படத்தில் கே.பாலசந்தர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் முதல் பாடலை எழுதினார்.

இப்போதும் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். இப்படி இருக்கும்போது இவரது பெயர் சொல்லும் பாடல்கள் பல பாடல்கள் இருந்தாலும், இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் படம் என்றால் அது, இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ஆராரிராரோ பாடல் தான். அம்மாவின் பாசத்தை சொல்லும் இந்த பாடல் ரசிகர்களை பாசத்தில் மூழ்கடிக்கும் பாடல்.

சினேகன்: இவர் இதுவரை சுமார் 750 முதல் 800 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட சினேகனின் கட்டிப்புடி வைத்தியமும் முத்தமும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சினேகன் அதில் இப்போது வரை பயணித்து வருகிறார்.

kavingar snekan Shares Video On Instagram About 100 Years Old His Father Plays With His Daughter
Photo Credit:

இரட்டை குழந்தைகள்: இப்படி இருக்கையில் சினேகன் கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகா ரவியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். அதனை பெருத்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் சினேகன். இவர்களின் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் காதல் கன்னிகா சினேகன் மற்றும் கவிதை கன்னிகா சினேகன் என பெயர் சூட்டினார் கமல்ஹாசன். அவ்வப்போது மகள்களுடன் இவர்கள் அடிக்கும் லூட்டி வீடியோக்கள் அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவும்.

100+ வயது அப்பா: இந்நிலையில் சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 100 வயதைக் கடந்த அவரது தந்தை சிவசங்குவுடன் அவரது மகள் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது தந்தையிடம் என்ன சொல்கிறாள் பேத்தி என்று கேட்கிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கே செம க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோவிற்கு 100+ வருடங்களை கடந்த சிவசங்கு தாத்தா ( சினேகனின் அப்பா) என்று கேப்ஷன் இட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் சினேகனின் தந்தைக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறதா என்று கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X