சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்.. துணை இருக்கும் நெல்சன் திலீப்குமார்.. அட என்ன தைரியம் பாருங்களேன்

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் கவின். படமானது கடந்த மே மாதம் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் கவின் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. அடுத்ததாக பிளெடி பெக்கர் படத்தில் நடித்திருக்கிறார். படம் இன்று வெளியாகியிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

diwali 2024 2024 sivakarthikeyan kavin amaran bloody beggar

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் சூழல் ஏற்படுவதை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

ஸ்டார்: டாடா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்தார் கவின். கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

பிளெடி பெக்கர்: ஸ்டார் படத்தின் தோல்வியை கண்டிப்பாக கவின் எதிர்பார்த்திருக்கமாட்டார் தான். எனவே அடுத்த படத்தில் எப்படியாவது பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அந்தவகையில் தனக்கு நெருக்கமான நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் பிளெடி பெக்கர் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது இன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தைரியம்?: கவின் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். அவரது கெட்டப்பும் வித்தியாசமாக இருக்கிறது. கதைக்களமும் காமெடி கலந்த ஜானரில் உருவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்துக்கு பெரும் சிக்கலாக உருவாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏனெனில் எஸ்கே இப்போது தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் அமரன் படமும் இன்று ரிலீஸ். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.

முக்கியமாக பான் இந்தியா அளவில் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது. முகுந்த் வரதராஜனை இந்திய அளவில் அனைவருக்குமே தெரியும். எனவே அந்த ஹைப்பே படத்துக்கு நல்ல விளம்பரமாக இருக்கும். எஸ்கேவுக்கு இருக்கும் மாஸ், முகுந்த் வரதராஜன் என்ற அடையாளம் அமரனை பாதுகாக்க வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் பிளெடி பெக்கருக்கு அவ்வளவு பெரிதாக எந்த வெளிச்சமும் இல்லை. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனுடன் போட்டிக்கு களமிறங்கியிருக்கிறார் கவின். அதனால் சிவகார்த்திகேயனுடன் போட்டிப்போட்டு வென்றுவிடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

முக்கியமாக என்ன தைரியத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக படத்தை இறக்குகிறார் என்ற குரலையும் கோடம்பாக்கத்தில் கேட்க முடிகிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனின் மெண்ட்டார்களில் ஒருவர். எனவே அவர்தான் கண்டிப்பாக கவினுக்கு தைரியம் கொடுத்திருக்க வேண்டும் என்றும்; இந்தப் போட்டி கண்டிப்பாக பொறாமையாக இருக்காது ஆரோக்கியமானதாகவே இருக்கும். இப்படிப்பட்ட கிளாஷில் இறங்கியிருக்கும் கவினையும், நெல்சனையும் பாராட்ட வேண்டும் என்றும் திரை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X