Actor Kavin: மறுபடியும் அந்த தப்பு நடக்கக்கூடாது.. கிஸ்ஸில் தீவிரம் காட்டும் கவின்!
சென்னை: நடிகர் கவின் லிஃப்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றார். முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கவின், பட வாய்ப்புகளையும் பெற்றார். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், அடுத்தடுத்து டாடா, ஸ்டார் படங்களை கொடுத்துள்ளார்.
இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியான பிளடி பெக்கர் சொதப்பியது. இந்நிலையில் அடுத்தடுத்து கிஸ், மாஸ்க் உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக அமையும் என்று நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

நடிகர் கவின்: நடிகர் கவின் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது. லிஃப்ட் படம் மூலம் தன்னை சிறப்பாக கோலிவுட்டில் என்ட்ரி செய்து கொண்ட கவின், படத்தில் மாஸ் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகச் சிறப்பான அறிமுகமாக அமைந்த நிலையில் அடுத்ததாக அவர் நடித்த டாடா படம் அவரை பீக்கிற்கு கொண்டு சென்றது. இந்தப் படத்தில் ஒரு குழந்தையின் அப்பாவாக நடித்திருந்தார் கவின்.
சொதப்பிய பிளடி பெக்கர் படம்: சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னுடைய மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழ்க்கையை துவங்கும் ஒரு இளைஞனின் கேரக்டரை அப்படியே டாடா படத்தில் கொண்டு வந்திருந்தார். இந்த படம் கவினுக்கு அதிரபுதிரி வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்த நிலையில் அடுத்ததாக கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியானது. இந்தப் படமும் அவருக்கு சிறப்பாகவே கை கொடுத்த நிலையில் சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் உருவான பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார் கவின். பிளாக் காமெடியை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாகியிருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கை கொடுக்கவில்லை.
கிஸ் படத்தில் கவின்: அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகியிருந்த பிளடி பெக்கர் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியானது. அமரன், பிரதர், லக்கி பாஸ்கர் படங்களுடன் போட்டி போட்ட இந்த படம், அதில் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தற்போது சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து வருகிறார் கவின். பிளடி பெக்கர் படத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ள கவின், தன்னுடைய அடுத்த படத்தை மிகச் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது கிஸ் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து இந்த படத்தை கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
நம்பிக்கையுடன் கவின்: இயக்குனர் சதீஷ் மாஸ்டருடன் இணைந்து இதை செயல்படுத்தவும் முனைந்து வருகிறார் கவின். அடுத்தடுத்து கவின் நடிப்பில் கிஸ், மாஸ்க், ஹை என மூன்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மூன்று படங்களின் சூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடந்துவரும் நிலையில், இந்தப் படங்களின் சூட்டிங்கும் ஒரே நேரத்தில் முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கவின், நயன்தாராவுடன் நடித்துவரும் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











