Kiss: ஒய் திஸ் கொலவெறி கவின்?.. காதலர் தினத்தன்று வெளியான கிஸ் டீசர் எப்படி இருக்கு?

சென்னை: நடன இயக்குநராக இருந்த சதீஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், கவினை வைத்து 'கிஸ்' எனும் படத்தை இயக்கியுள்ளார். காதலர் தினக் கொண்டாட்டமாக தற்போது கிஸ் படத்தின் டீசரை நடிகர் கவின் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான கவின் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவின் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

kavin kiss preethi asrani

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிறகு லிப்ட் படத்தில் நடித்த கவினுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. டாடா படம் வசூல் ரீதியாக அவரை எங்கேயோ கொண்டு வந்து சேர்க்க கடந்த ஆண்டு கவினுக்கு சிறப்பாக அமையவில்லை.

kavin kiss preethi asrani

க்யூட்டான கவின்: இளம் ரசிகர்களை கவரும் சாக்லேட் பாயாக கவின் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே தான் செம போட்டி என்கின்றனர். மேலும், கவினை அடுத்த சிவகார்த்திகேயன் என்றும் விஜய் டிவியில் இருந்து வந்து சிவகார்த்திகேயன் எப்படி முன்னணி ஹீரோவாக மாறினாரோ அதே போல கவினும் கலக்கி வருகிறார் என்கின்றனர். கடந்த ஆண்டு வெளியான ஸ்டார் திரைப்படம் இவருக்கு பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2ம் பாதியில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக அந்த படம் பெரிதாக போகவில்லை.

kavin kiss preethi asrani

சொதப்பிய ப்ளடி பெக்கர்: தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கே போட்டியாக கவினின் ப்ளடி பெக்கர் படம் வெளியானது. நெல்சன் தயாரிப்பில் வெளியான அந்த படம் தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களை ஈர்க்காத நிலையில், படுதோல்வியை சந்தித்தது. ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் படம் வித்தியாசமாக இருப்பதாக பாராட்டினர். ஆனால், கவின் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

kavin kiss preethi asrani

கிஸ் டீசர்: இந்நிலையில், கவினின் அடுத்த படமாக கிஸ் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அதன் கலக்கலான டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அயோத்தி படம் மூலம் ரசிகர்களை நடிப்பால் வியக்க வைத்த ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சதீஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்கள் கிஸ் அடிப்பதை பார்த்து காண்டாகும் கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ள நிலையில், அவருக்கு காதல் வர வாழ்க்கை என்னாகிறது என்பது தான் இந்த படத்தின் ஒன்லைனாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

கிஸ் க்ளிக் ஆகுமா?: நடிகர் கவினுக்கு கமர்ஷியல் வெற்றியை இந்த கிஸ் படம் கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். நடன இயக்குநராக இருந்து வந்த சதீஷ் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் விடுமுறையை டார்கெட் செய்து வெளியானால் கிஸ் க்ளிக்காகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X