லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
சென்னை: பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் ஒரு மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான அந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் கடைசியாக வெளியான மெலோடி பாடல் வேற லெவலில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது.

அதற்கு காரணம் அந்த பாடலில் கவின் லேடி கெட்டப் போட்டு கல்லூரி ஆண்டு விழாவில் வெறித்தனமாக ஆடுவதுதான். இந்நிலையில், நடிகர் கவின் எப்படி பெண் வேண்டும் இட்டு மெலோடியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தானம் vs கவின்: வரும் மே மாதம் 10-ஆம் தேதி சந்தானம் நடித்துள்ள "இங்க நான் தான் கிங்கு" படம் வெளியாகிறது. அதே நாளில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படமும் வெளியாகிறது. இரண்டு படங்களில் வசூல் ரீதியாக எந்த படம் வெற்றி பெறும் என ரசிகர்கள் தற்போதைய கணிப்புகளை கணிக்க ஆரம்பித்துள்ளனர். வரும் மே 3-ம் தேதி அரண்மனை 4 திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
ரெமோ vs மெலோடி: ரெமோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப் போட்டு ரெஜினா மோத்வானியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனை போல விஜய் டிவியில் இருந்து வந்து சினிமாவில் கலக்கி வரும் நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில் மெலோடியாக லேடி கெட்டப் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருவரில் யாருடைய லுக் பெஸ்ட் என ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.
பெண்ணாக மாறும் கவின்: வேட்டையனாக சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா படங்களில் நடித்து வந்தவர் தற்போது ஸ்டார் படத்தின் மூலம் பெரிய ஸ்டாராக காத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதற்காக கவின் எப்படி ரெடியான என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகின்றனர்.
ஹரிஷ் கல்யாண் நடிக்க வேண்டியது: பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்திருந்தனர். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்து இளன் ஸ்டார் படத்தை இயக்கும் போதும் ஹரிஷ் கல்யாணை தான் ஹீரோவாக ஆக்கினார். ஆனால், சில பல கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிய நிலையில், கவின் இந்த படத்தில் நடித்துள்ளார்.
ஷீ வெப்சீரிஸ் நடிகை: இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கல்லூரி கால ஜோடியாக ப்ரீத்தி முகுந்தனும், நடிகராக அவர் மாறிய பின்னர் அதிதி போஹங்கரும் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியில் வெளியான ஷீ வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் எல்லை மீறி நடித்த அதிதி போஹங்கர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











