Mask Day 1 Box Office - கவினின் மாஸ்க்.. முதல் நாள் வசூலில் கெத்து காண்பித்ததா? மொத்தமாய் படுத்ததா?

சென்னை: கவின் நடிப்பில் விகர்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்க் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. வெற்றிமாறனும், ஆண்ட்ரியாவும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ட்ரெய்லரே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் ரிலீஸ் ஆன முதல் நாளான இன்று ஆவலோடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

டாடா, கிஸ் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கவின் இப்போது விகர்ணன் இயக்கத்தில் மாஸ்க் படத்தில் நடித்திருக்கிறார். இதனை விகர்ணன் அசோக் என்பவர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார். இதுதான் அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன், ஆண்ட்ரியா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இன்று ரிலீஸான படம்: இதுவரை பாடகி, நடிகை என்று மட்டும் இருந்த ஆண்ட்ரியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். மேலும் வெற்றிமாறனும் தயாரித்திருக்கிறார். வெற்றி ஒரு படத்துக்குள் வந்தால் கண்டிப்பாக அதில் ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு இன்று படம் பார்க்க தியேட்டர்களுக்கு படை எடுத்தார்கள் ரசிகர்கள்.

Kavin s Mask Movie First Day Box Office Collection is 68 Lakhs only in India
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக்களத்தை இயக்குநர் எந்தவித சொதப்பலும் இல்லாமல் அழகாக உருவாக்கி ப்ரெசண்ட் செய்துவிட்டார் என்றும்; டார்க் க்ரைம் காமெடி ஜானரில் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இவருக்கு தமிழ் சினிமாவில் கண்டிப்பாக தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது என்றும் உறுதியளிக்கிறார்கள்.

கவின் - ஆண்ட்ரியா பட்டாசு: படத்தின் மேக்கிங் எப்படி ப்ளஸ்ஸாக இருக்கிறதோ அதேபோல் கவின், ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பும் பட்டாசாக இருக்கிறது என்பது பலரது கருத்து. நிச்சயம் டாடா படத்துக்கு பிறகு கவினுக்கு இது பேர் சொல்லும் படமாக அமையும்; அதேபோல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இது நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

என்ன வசூல்?: Sacnilk வெளியிட்டிருக்கும் தகவல்படி இன்று இப்படம் மொத்தம் 68 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய்வரை மட்டுமே வசூலித்திருக்கிறதாக தெரியவந்திருக்கிறது. அதேசமயம் இது முதற்கட்ட தகவல்தான் என்பதால் காலை முழு விவரமும் வரும் என்று தெரிகிறது. மேலும், இது குறைவான வசூல்தான் என்றாலும்; முதல் நாளில் படம் பற்றி பாசிட்டிவ் பேச்சுக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. எனவே அடுத்த நாட்களில் கண்டிப்பாக படத்துக்கு கூட்டம் வரும்; வசூலும் உயர்ந்துவிடும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கையாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X