Mask X Review: கவினின் 'மாஸ்க்' படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் முடிந்த பின் கவின் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக நல்ல விமர்சனத்தை பெற்றது. அதன் பின், டாடா, ஸ்டார் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த கவின் நடிப்பில் கடைசியாக வெளியான பிளடி பெக்கர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அந்த படத்தை தொடர்ந்து கவின் மாஸ்க் படத்தில் நடித்துள்ளார்.

Mask Twitter Review Kavin

விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்க்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கும். இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். மாஸ்க் ஒரு கவர்ச்சிகரமான திரைப்படமாக உள்ளது. படத்தின் கதைக்களம் மற்றும் சக்திவாய்ந்த நடிப்பால் பார்வையாளர்களை கவர்கிறது. படத்தின் இயக்கம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. படம் சிறப்பாக இருப்பதால், நிச்சயம் அனைவரும் பார்க்க தகுந்த திரைப்படமாக உள்ளது என பதிவிட்டு படத்திற்கு 3 ஸ்டார்களை அளித்துள்ளர்.

எதிர்பார்ப்பை ர்தூண்டி உள்ளது: படம் பார்த்த மற்றொரு இணையவாசி மாஸ்க் திரைப்படம் இடைவேளையை காட்சி அட்டகாசமாக இருக்கிறது. கதை இனிமேல் தான் ஆரம்பம். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. அடுத்து பார்க்க ஆவலாக இருக்கிறேன். கவினின் மாஸ்க் திரைப்படம் மாஸ் என பதிவிட்டுள்ளார்.

செயற்கை தனமான நடிப்பு: மற்றொருவர், கவின் மிகவும் தன்னம்பிக்கையுடன், வலுவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆண்ட்ரியா மற்றும் சிலரின் நடிப்பு மிகவும் செயற்கை தனமாக உள்ளது. மேலும், படத்தின் இசை, நகைச்சுவை, சண்டை காட்சிகள், உரையாடல்கள் அருமை. படத்திற்கு நகைச்சுவை வலுவாக அமைந்துள்ளது. ஆனால், திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கவனத்தை செலுத்தி இருக்க வேண்டும், அதுகதையின் ஒட்டத்திற்கு தடையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்

ரசிக்கும்படி உள்ளது: கவினின் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்க் திரைப்படத்தின் கதை சிறப்பாக உள்ளது. கவின் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். படம் ரசிக்கும்படி உள்ளது. இயக்குநர் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஒரு சிறந்த திரைப்பட இருக்கும், நிச்சயமாக நல்ல வசூலை அள்ளும், அனைவரும் பார்க்கத் தகுந்த படம். படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X