Star - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. கவினின் ஸ்டார் பட சிங்கிள் ரிலீஸ்.. சும்மா அள்ளுது
சென்னை: Star First Single (ஸ்டார் முதல் சிங்கிள்) இளன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ஸ்டார் படத்தின் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
திருமணம்: இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கவினின் புதிய படம்: இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றன. முழுக்க முழுக்க கல்லூரி மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி படம் உருவாகிவருவதாக தெரிகிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடல் விண்டேஜ் ஸ்டைலில் உருவாகியிருக்கிறது. மேலும் கவின்90கள் கெட் அப்பில் தோன்றுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் ரிலீஸாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











