Vairamuthu: எழுந்து வா இமயமே..இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த வைரமுத்து!
சென்னை: vairamuthu meet bharathiraja (பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து) இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அவரை சந்தித்து கவிதை பாடி உற்சாகப்படுத்தி உள்ளார்.
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை வயல்மேடுகள்,கடல் அலைகள், பரந்து விரிந்த மலைகள் என காட்சிக்கு காட்சி அழகுப்படுத்தினார்.

சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என உணர்வுகள் இழையாடும் காலத்தால் என்றும் அழியாத பல திரைப்படங்களைக் கொடுத்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா: 82 வயதான பாரதி ராஜாவுக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பாரதிராஜா, கவிப்பேரரசு வைத்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அந்த வீடியோவை வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு சீமையில: அதில், நான் அண்மையில் பார்த்ததை விட நீங்க ரொம்ப நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் நலம் தேறிவிட்டது என்பதை உங்கள் முகம் சொல்லுகிறது. நான் உங்களுக்கு ஒரு வாழ்த்து கவிதை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த வாழ்த்து கவிதையை கேட்டு நீங்கள் ஆனந்தம் அடைய வேண்டும் என்றார். நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையில பாடலை அப்படியே மாற்றி, பாரதிராஜாவுக்காக கவிதை எழுதி உள்ளார்.
எழுந்து வா இமயமே: கவி பேரரசுவின் கவிதையை கேட்டு குழந்தை போல மகிழ்ச்சி அடைந்த பாரதிராஜா, மருத்துவர்களை விட கவிஞர்களின் இதுபோன்ற வரிகளே தன்னை உற்சாகப்படுத்துகிறது என்றார். எழுந்து வா இமயமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











