twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எழுத்தின் சிகரம் என்று இயக்குனர் சிகரத்திற்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து

    |

    சென்னை : வைரமுத்து தமிழ் சினிமாவின் சிற்பி என்றே கூறலாம் . இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கே.பாலசந்தர் அவர்களை பற்றி மேடையில் பேசினார்.

    அப்போது பேசுகையில் பாலசந்தரை சிற்பி என்று கூறியிருந்தார் எழுத்து சிற்பியான வைரமுத்து. அதற்கான விளக்கத்தையும் அவரே கூறினார் ஒரு படத்தில் மேல்குடி மக்களுக்கு ஏன் நாம் எப்போதும் பாடல் கொடுத்து கொண்டிருக்கிறோம். இந்த பாடல் உழைக்கும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அது மக்களின் வாழ்வை பேச வேண்டும் என்றும் பாலசந்தர் தன்னிடம் கூறி பாடலின் வரிகளை கேட்டதாக வைரமுத்து கூறினார். அப்போது தான் பாலசந்தர் வெறும் இயக்குனர் மட்டும் இல்லை என்பதை தான் உணர்ந்ததாக வைரமுத்து கூறினார்.

    Kaviperarasu Vairamuthu special speech about K. Balachander and Kamal relationship

    மேலும் பேசிய கவிஞர் வைரமுத்து கமலுக்கு இது, சிலைகளின் வாரம் போலும், பெற்றுத் தந்த தந்தைக்கு ஒரு சிலை பரமகுடியில், கற்றுத்தந்த தந்தைக்கு இங்கே இன்று சிலை. கமல்ஹாசனை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பாலசந்தர் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? என்று 'என் வருமான வரிக்கு காரணமானவர் அவர் தான்' என்று சொன்னார் கமல். இதைவிட ஒரு வார்த்தையில் அவரை பாராட்ட முடியாது.

    Kaviperarasu Vairamuthu special speech about K. Balachander and Kamal relationship

    பாலசந்தர்-கமல் இருவருக்கும் இடையில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். அது இரண்டு கற்கண்டு கட்டிகள் முட்டிக் கொண்டது போலதான். கற்கண்டு கட்டிகள் முட்டினாலும் உதிர்வது சர்கரையாக இருக்குமே தவிர ஒருபோதும் மணலாக இருக்காது. அப்படி முட்டிக் கொண்டார்கள். ஒருமுறை செல்லமாக இவருடன் கோபித்துக் கொண்டார், நான் வளர்த்தவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று, அதற்கு கமல், உண்மையில் தகப்பன் பிள்ளையை தூக்கி கொஞ்சுகிற போது பிள்ளை உயரமாகத்தான் இருக்கும் என்றார். இப்படி அழகழகான முரண்பாடுகளோடு ஒரு தகப்பனாக ஒரு கலை ஆசானாக பாலசந்தர் அவர்களை கொண்டாடியவர் கமல் அவர்கள் என வைரமுத்து பேசினார்.

    பிறந்த நாள் அதுவுமா தம்பிகளுக்கு டபுள் ட்ரீட்.. சீமான் இன்னும் சினிமாக்காரர்தான்!பிறந்த நாள் அதுவுமா தம்பிகளுக்கு டபுள் ட்ரீட்.. சீமான் இன்னும் சினிமாக்காரர்தான்!

    வைரமுத்து இப்படி பல இடங்களில் பேசி இருக்கிறார் . அவர் மிகவும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் மிகுந்த பேச்சில் அனைவைரையும் கவரும் திறமை கொண்டவர். அதே போல் இன்றும் சரியாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    கரும்பு சாப்பிட கூலி கொடுக்க வேண்டுமா என்ன. ஆம் அப்படி தன இருந்தது வைரமுத்து அவர்கள் இயக்குனர் சிகரத்தை பற்றி பேசிய போது.

    English summary
    Statue opening ceremony of director K. Balachandar happend today in Alawarpet today morning. In this ceremony many celebraties were welcomed. Vairamuthu when he spoke about balachander on stag he just poured flowers on him with his words. Then he spoke about the relationship between kamal and balachander. They are more like father and son.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X