அதுவே ஒரு ஃபேக் ரியாலிட்டி ஷோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. ஏன் தெரியுமா?

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ஃபேக் ரியாலிட்டி ஷோ என ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை கவிதா கெளசிக்.

இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 14வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், டைட்டில் வின்னருடன் நடந்த மோசமான சண்டை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

எஃப்.ஐ.ஆர் டிவி ஷோ மூலம் பிரபலமான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான யோகாக்களை செய்து அசத்தி வருகிறார்.

செம பாப்புலர்

செம பாப்புலர்

டெல்லியை சேர்ந்த கவிதா கெளசிக் சில பாலிவுட் படங்களிலும், சில பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். எஃப்.ஐ.ஆர், குடும்ப் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் செம பாப்புலர் ஆனவர் கவிதா கெளசிக். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 14ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கஷ்டமான யோகாக்கள்

கஷ்டமான யோகாக்கள்

யோகா செய்வதை மிகவும் ஆர்வத்துடன் செய்து வரும் கவிதா கெளசிக் மிகவும் கஷ்டமான யோகாக்களை சர்வ சாதாரணமாக செய்து அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இவரது யோகா போட்டோக்களை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

டைட்டில் வின்னருடன் வாக்குவாதம்

டைட்டில் வின்னருடன் வாக்குவாதம்

தமிழில் மட்டுமல்ல எந்த மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும், போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டை, வாய் தகராறு, திட்டிக் கொள்ளுதல், குடும்பத்தை இழுத்து பேசுதல் உள்ளிட்டவை நடந்து தான் வருகின்றன. அந்த நிகழ்ச்சியின் டிசைனும் அதுதான். பிக் பாஸ் சீசன் 14ல் டைட்டிலை தட்டிச் சென்ற ரூபினா திலைக் உடன் கடும் சண்டை போட்டு விட்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து கவிதா வெளியேறினார்.

பெயர் கெட்டுப்போச்சி

பெயர் கெட்டுப்போச்சி

ஆரியுடன் குரலை உயர்த்தி சண்டை போட்ட அனிதா சம்பத், அந்த வாரமே வீட்டுக்கு அனுப்பப்பட்ட அதே ஸ்க்ரிப்ட் தான் இவரது கதையிலும் அரங்கேறியது. அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்களை இங்கே எப்படி கழுவி ஊற்றினார்களோ, அதை விட பல மடங்கு அதிகமாக கவிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஃபேக் பிக் பாஸ்

கவிதா கெளசிக்கை விடாமல் நெட்டிசன்கள் வச்சு செய்து வரும் நிலையில், கவிதாவின் ரசிகர் ஒருவர், அந்த நிகழ்ச்சிக்கே நீங்கள் போகாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று போட்டுள்ள ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ள கவிதா, அதுவே ஒரு ஃபேக் ரியாலிட்டி ஷோ, அதன்மூலமாக என் பெயர் கெட்டுப் போகுதா என போட்டுள்ள ட்வீட் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

இங்கேயும் சொல்லியிருக்காங்க

இங்கேயும் சொல்லியிருக்காங்க

ஏற்கனவே ஓவியா, கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தகவல்களை கூறியுள்ளனர். பிக் பாஸ் காண்ட்ராக்ட் போட்டியாளர்களை டார்ச்சர் செய்வதாக ஓவியா குறிப்பிட்டு இருந்தார். நடிகை கஸ்தூரி ஓட்டெல்லாம் வைத்து வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள், அவங்க இஷ்டத்துக்கு ஒருத்தரை தேர்வு செய்து டைட்டில் கொடுப்பாங்க என்றும் அந்த நிகழ்ச்சியை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X