பார்க்கில் பிராவுடன் வொர்க்அவுட் செய்த நடிகையை தாக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் நிர்வாகி!

பெங்களூரு: பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே தாக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான கவிதா ரெட்டி மன்னிப்பு கோரியுள்ளார்.

Recommended Video

சம்யுக்தா ஹெக்டேக்கு நேர்ந்த கொடுமை.. நியாயம் கேட்ட சக நடிகை

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

இந்தப் படத்தில் நிக்கிதா கிருஷ்ணமூர்த்தியாக அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் சம்யுக்தா சிறந்த நடன கலைஞரும் ஆவார்.

சம்யுக்தா மீது தாக்குதல்

சம்யுக்தா மீது தாக்குதல்

இந்நிலையில் நடிகை சிம்யுக்தா ஹெக்டே கடந்த வெள்ளிக் கிழமை பெங்களூருவில் உள்ள ஒரு பார்க்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சி பெண் நிர்வாகியான கவிதா ரெட்டி, கும்பலை கூட்டி நடிகை சம்யுக்தா மற்றும் அவரது நண்பர்களை தாக்கினார்.

நடிகை கதறல்

நடிகை கதறல்

சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிராவுடன் உடற்பயிற்சி செய்ததால் அவரை தாக்கியுள்ளனர். இதனை நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறலுடன் தெரிவித்தார். தாங்கள் தாக்கப்பட்ட வீடியோக்களையும் அவர் ஷேர் செய்தார்.

கவிதா ரெட்டி மீது புகார்

கவிதா ரெட்டி மீது புகார்

இந்த விவகாரம் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் சம்யுக்தா தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கவிதா ரெட்டி மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்டு வீடியோ

மன்னிப்பு கேட்டு வீடியோ

இந்நிலையில் கவிதா ரெட்டி, சம்யுக்தா ஹெக்டே மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் கவிதா ரெட்டி. மேலும் தான் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் கவிதா ரெட்டி.

மாரல் பாலிசிங்கை எதிர்ப்பவள்

மாரல் பாலிசிங்கை எதிர்ப்பவள்

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், பதிவிட்டிருப்பதாவது, நான் எப்போதும் மாரல் பாலிசிங்கை எதிர்ப்பவள். அதுபோன்றுதான் என்னுடைய நடவடிக்கையும் இருந்ததாக உணருகிறேன்.

மன்னிப்பு கோருகிறேன்

மன்னிப்பு கோருகிறேன்

நான் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக ஒரு வாதம் முடிந்துள்ளது. அது தவறுதான். ஒரு பொறுப்புள்ள குடிமகன் மற்றும் முற்போக்கான பெண் என்ற முறையில், நான் சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X