முதுகில் குத்துகிறார்கள்.. கவுண்டம்பாளையம் நல்ல படம்.. ரஞ்சித் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் கவுண்டம்பாளையம் இந்த படம் கடந்த மாதம் 5ந் தேதி வெளியாக இருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இன்று தியேட்டரில் வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், சிலர் படத்தை பார்க்ககாமலே படம் குறித்து விமர்சித்து வருகிறார்கள். தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க, அதன் பிறகு விமர்சிக்கலாம்.

முதுகில் குத்துகிறார்கள்: என்னை மட்டும் டார்கெட் பண்ணி அடிக்கிறார்கள், எங்கு இருந்து அடிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. நான் நேர்மையாக இருக்கிறேன், நியாயமாக இருக்கிறேன். நான் தான் படம் எடுத்து இருக்கிறேன், எனக்கு என்று யாரும் இல்லை, நான் மக்களை நம்பித்தான் படத்தை இருக்கிறேன். என்னை எதிர்க்க நினைப்பவர்கள், முகத்தை காட்டாமல் முதுகில் குத்துகிறார்கள். நான் நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன், நேர்மையான படத்தை எடுத்து இருக்கிறேன். இந்த படத்தை அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவை தரவேண்டும் என்றார்.
சாதிபடம் இல்லை: நான் படத்திற்கு சாதி பெயர் வைக்கவில்லை, கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு ஊருக்குள்ளும் கவுண்டம்பாளையம் என்று பெயர் இருக்கிறது. கவுண்டம்பாளையம், கவுண்டம்பட்டி இப்படி பல பெயர்கள் இருக்கிறது. இது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொருத்தது. என்னை பற்றி எதாவது வன்மத்தை பரப்பி, மற்ற சமூகத்தினரிடம் இருந்து என்னை புறக்கணிக்க வைத்து என்னை ஒரு சிறிய டப்பிக்குள் அடைக்க நினைக்கிறார்கள். நான் நிறைய படம் நடித்து இருக்கிறேன், மக்கள் என்னை பார்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் என்றார்.


Click it and Unblock the Notifications











