அழகாய் பேசுகிறாய், ஆனால் பயமாய் இருக்கிறது: காவ்யாவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்
துபாய்: துபாயில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகை காவ்யா மாதவனின் ஆங்கிலம் பேசும் அழகைப் பார்த்து இன்டர்நெட்டில் ஏகத்துக்கும் கிண்டலடிக்கிறார்களாம்.
மலையாளத்தில் பிரபலமான நடிகை காவ்யா மாதவன். தமிழிலும் நடித்துள்ளார். இவர் ஆங்கிலம் சுமாராகத்தான் பேசுவார்.
ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்பு கூட இவருக்குத் தெரியாது என்பார்கள். இவரது ஆங்கில உச்சரிப்புக்கு துபாயில் தற்போது கேலியும், கிண்டலும் பரிசாக கிடைத்துள்ளது.

நடிப்பை விட மிமிக்ரி பெஸ்ட்
காவ்யா மாதவனுக்கு மிமிக்ரி நன்றாகத் தெரியும். நடிப்பை விட மிமிக்ரி அவர் நன்றாக செய்வார்.

அவரையே மிமிக்ரி செஞ்சுட்டாங்களே...
ஆனால் தற்போது அவரையே மிமிக்ரி மூலம் கிண்டலடித்து வருகின்றனர் இன்டர்நெட்டில்.

துபாய் பேச்சுக்கு கேலி
துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காவ்யா அங்கு ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பாதியிலேயே மலையாளத்துக்கு ஜம்ப்
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி பேசிய காவ்யா பிறகு தாங்க முடியாமல் மலையாளத்துக்குத் தாவி விட்டார்.

இதுக்கெல்லாமா கிண்டலடிப்பாங்க
ஆனால் காவ்யாவின் ஆங்கிலப் பேச்சை கிண்டலடித்து இன்டர்நெட்டில் ஏகப்பட் போஸ்ட்டுகள் போய்க் கொண்டிருக்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications











