காவ்யா மாதவனை, கல்யாணம் கழிக்குமோ திலீப்பு?
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னணி நடிகரான திலீப்பும், மலையாள உலகின் பிரபல நடிகையான காவ்யா மேனனும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்களாம்.
ஆம் இப்படித்தான் வதந்தியா, உண்மையா என்று தெரியாத செய்தி ஒன்று கேரள பட உலகில் உலவி வருகின்றது.
ஆனால், விசாரித்தால் செய்தியே வேறு என்கிறார்கள் விவரம் தெரிந்த சினிமாக்காரர்கள் சிலர்.

வெற்றிகரமான ஜோடி:
மலையாளத் திரையுலகில் இவர்கள் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தார்கள்.

மஞ்சு வாரியார் – திலீப்:
நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப்பும் விவாகரத்து பெற்றுவிட்டார்.

காவ்யா மாதவனும் ஃப்ரீ:
அதேபோல தொழிலதிபரை திருமணம் செய்த காவ்யா மாதவனுக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது.

தயாரிப்பாளர்கள் ரெடி:
மறுபடியும் இருவரையும் ஜோடி சேர்த்து காதல் படங்களை எடுக்கத் தயாரிப்பாளர்கள் ரெடியாகிவிட்டார்கள்.

சினிமா கெமிஸ்ட்ரி:
அத்துடன் சினிமா கெமிஸ்ட்ரிக்காக தயாரிப்புகள் தரப்பே இருவரின் திருமண செய்தியையும் பரப்பிக் கொண்டிருக்கிறதாம்.

ஏற்கனவே இருந்துச்சே:
ஆனால் இவர்கள் இருவரையும் இணைத்து ரொம்ப காலமாகவே மலையாளத் திரையுலகில் வதந்திகள் நிறையவே இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர் இல்லாம ஸ்மோக்?:
எனவே நெருப்பில்லாமல் புகையாது என்கிறது மல்லுவுட் வட்டாரம். பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடக்கின்றது என்று.


Click it and Unblock the Notifications











