நடிகை பலாத்கார வழக்கு... காவ்யா மாதவன் முன் ஜாமின் மனு!
கொச்சி: நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று கோரி முன் ஜாமின் கேட்டு மனு செய்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.
பிரபல தமிழ், மலையாள நடிகை சமீபத்தில் கேரளாவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பல்சர் சுனில் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்ததில், நடிகர் திலீப்புக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது. அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்குமுறை ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கும் இந்த கடத்தலில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது.
எனவே இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக காவ்யா மாதவன் கருதுகிறார்.
எனவே தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, முன்ஜாமின் வழங்கக்கோரி கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











