காது கொடுத்துக் கேட்டேன்.. காவ்யா வீட்டில் குவா குவா சத்தம்!

Recommended Video

காவ்யா மாதவன் வளைகாப்பு வைரல் புகைப்படங்கள்- வீடியோ

கொச்சி: நடிகை காவ்யா மாதவனுக்கு பிறந்தநாளன்று வளைகாப்பு நடந்துள்ளது.

விக்ரம் பார்வையற்றவராக நடித்த காசி திரைப்படத்தில் நடித்தவர் மலையாள நடிகை காவ்யா மாதவன். தமிழில் என் மன வானில் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்துவந்த அவருக்கு, மலையாள நடிகர் திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. திலீப்புக்கு ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியருடன் திருமணமாகி இருந்தது. அதனால் திலீப் மஞ்சு வாரியரின் குடும்ப வாழ்க்கையில் காவ்யா புயல் மையம் கொண்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

 Kavya Madhavan baby shower function!

திலீப் மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்துகொண்டனர். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு காவ்யாவும் திலீப்பும் திருமணம் செய்துகொண்டனர். திலிப் மஞ்சு வாரியர் தம்பதிக்கு பிறந்த மீனாட்சி இப்போது திலீப்புடன் வசித்து வருகிறார்.

தற்போது திலீப் காவ்யா தம்பதியினரின் இல்லற வாழ்க்கைக்குச் சான்றாக காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. தன்னுடைய 34 வது பிறந்தநாளைக் கொண்டாடிய காவ்யா மாதவனுக்கு மிகச் சிறப்பான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. தன் குடும்ப வாரிசை வரவேற்கும் விதமாக மஞ்சள் உடையில் மங்களகரமால காட்சியளித்தார் காவ்யா. இந்த நிகழ்வில், நடிகர் திலீப் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மஞ்சு வாரியரைப் பிரிந்து, காவ்யாவை கரம்பிடித்த நடிகர் திலீப் மீது நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X