»   »  நடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்

நடிகை கடத்தல் வழக்கில் கைது பயம்: முன்ஜாமீன் கோரிய காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காவ்யா மாதவன்.

பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியோ தனக்கு உத்தரவு போட்ட மேடம் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் தான் என்று அண்மையில் தெரிவித்தார்.

Kavya Madhavan seeks anticipatory bail

நடிகையை கடத்தும் முன்பு சுனி காவ்யாவின் கொச்சி வீட்டிற்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் காவ்யாவின் தாயிடம் இருந்து சுனி ரூ. 25 ஆயிரம் முன்பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

நடிகையை கடத்திய பிறகு சுனி காவ்யாவின் கடையான லக்ஷ்யாவுக்கு சென்றதற்கும் ஆதாரங்கள் உள்ளது. நடிகையை வீடியோ எடுத்த செல்போனை அவர் அந்த கடையில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு ரூ. 2 லட்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது.

நடிகை வழக்கில் காவ்யா மற்றும் அவரது தாயிடம் போலீசார் ஏற்கனவே மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது பயத்தில் உள்ள காவ்யா மாதவன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

English summary
Kavya Madhvan has applied for anticipatory bail in the Kerala High court in connection with a popular actress abduction case.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil