நடிகை பாலியல் பலாத்கார வழக்கு.. காவியா மாதவனுக்கு முக்கிய பங்கு?.. இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்!

கொச்சி: பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நடிகை காவியா மாதவன் விசாரணைக் குழு முன் இன்று ஆஜராக மாட்டார் என்று தெரிகிறது.

பிரபல நடிகையின் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியைக் கலைத்ததற்காக நடிகை காவியா மாதவன் மீது புகார் எழுப்பி விசாரணை நடத்தி தற்போது நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடத்தி காவ்யா மாதவன் உடந்தையாக இருந்தது தொடர்பான ஆடியோ ஆதாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சில ஆண்டாகவே நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார்.

Kavya Madhavan won’t appear for interrogation on today

பாலியல் வன்கொடுமை வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. காவ்யா தொடர்பான சில குரல் காட்சிகள் வெளியானதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்த விசாரணைக் குழு, திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜின் கைத்தொலைபேசிகளில் இருந்து வழக்கில் சில முக்கிய ஆதாரங்களை சேகரித்ததாக குற்றப்பிரிவு குழு கூறியுள்ளது.

இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள திலீப்பின் குரல் காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் ஒரு பகுதியாக கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க விசாரணை குழு திட்டமிட்டுள்ளது. நேற்று விசாரணைக் குழுவினர் நடிகை மஞ்சு வாரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். கசிந்த குரல் கிளிப்களில் திலீப் மற்றும் மற்றவர்களின் குரலை மஞ்சு அடையாளம் காட்டினார்.

இந்நிலையில் , நடிகை காவியாவை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், காவியா விசாரணைக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், இன்று விசாரணைக்கு ஆஜராவதில் சிரமம் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையை வேறு சில நாட்களில் ஆஜராக அனுமதி தருமாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X