»   »  திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற நடிகை காவ்யா மாதவன்

திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற நடிகை காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை காவ்யா மாதவன் தன்னுடைய முதல் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அவரது முன்னாள் மாமியார் தெரிவித்துள்ளார்.

நடிகை காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு காவ்யா தனது கணவருடன் குவைத்தில் வசித்து வந்தார்.

குவைத்துக்கு சென்ற வேகத்தில் கணவரை பிரிந்து கேரளாவுக்கு வந்தார் காவ்யா.

விவாகரத்து

விவாகரத்து

பிப்ரவரி மாதத்தில் திருமணமான காவ்யா மாதவன் அதே ஆண்டு ஜூலை மாதமே விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். அவர் விரும்பியபடியே விவாகரத்தும் பெற்றார்.

ஆடியோ

நிஷால் சந்திராவின் தாய் தொலைபேசி மூலம் மலையாள பத்திரிகையாளருடன் காவ்யா மற்றும் திலீப் தொடர்பு பற்றி பேசிய ஒரு ஆடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.(அந்த ஆடியோவில் பேசியது நிஷாலின் அம்மா தானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை)

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

திருமணத்திற்கு முன்பே காவ்யாவுக்கு திலீப்புடன் தொடர்பு இருந்தது. இந்நிலையில் அவர் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார் என நிஷாலின் அம்மா தெரிவித்துள்ளார்.

சமாதானம்

சமாதானம்

தற்கொலைக்கு முயன்ற காவ்யாவை அவரது குடும்பத்தார் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். காவ்யா நல்ல பெண் என்று கூறிய ஒரே காரணத்திற்காக என் மகன் அவரை திருமணம் செய்தார் என்கிறார் நிஷாலின் தாய்.

English summary
Actress Kavya Madhavan's former mother-in-law accused her of attempting suicide just three days before her first wedding.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil